Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூட்டிங்கில் அவமானம்.. இப்போ குடும்பஸ்தன் படத்தில் வர காரணமே இதுதான்! ‘மை டியர் பூதம்’ மூசா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் சீரியலில் மூசாவாக நடித்த நடிகர் அபிலாஷ் பல வருடம் கழித்து இப்போது குடும்பஸ்தன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படும் போது அவர் இத்தனை வருடங்களாக எதற்காக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று பேசியிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் சீரியல் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் ஃபேவரைட். அந்த சீரியலில் மூசா என்று கொழுகொழுவென ஒரு குட்டி பையன் இருப்பார். அவரை பல குழந்தைகளுக்கும் பிடிக்கும். அந்த சீரியல் காமெடி கலந்த சென்டிமென்ட் சீரியல் ஆக இருந்தாலும் அந்த சீரியல் பார்ப்பதற்காக பலர் காத்திருந்த காலங்கள் உண்டு.

Sun TV kudumbasthan Movie

அந்த சீரியலில் மூசாவாக நடித்த அபிலாஷ் சமீபத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படத்தில் மோதிலால் ஜீவல்லர்ஸ் வைத்திருக்கும் மாணிக்சந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் எதற்காக சினிமாவை விட்டு விலகினேன் என்பது பற்றி பேசி இருக்கிறார்.

அதில், நான் சின்ன வயதில் இருக்கும்போதே நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்ததால் என்னுடைய அப்பாவோடு சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடி அலைந்தேன். வார நாட்களில் ஸ்கூல் போனாலும் வார இறுதி நாட்களில் தான் நடிப்புக்காக வாய்ப்பு கேட்டேன். அப்போது பல அவமானங்கள் நடந்து இருக்கிறது.

ஆனாலும் எனக்கு மை டியர் பூதம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய பாக்கியம்.
அந்த சீரியல் எனக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. அப்போதெல்லாம் நான் ஸ்கூலுக்கு சரியாக போக முடியாமல் இருந்தது. ஆனாலும் என்னை தேடி நிறைய மாணவர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். அந்த சீரியல் முடிவடைந்ததும் நான் படிக்க வேண்டும் படிப்பு தான் முக்கியம் என்று படிக்கப் போய்விட்டேன் அதனால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை.

Sun TV kudumbasthan Movie

அதற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தது நடிகர் ஆரி சார் நடித்திருந்த நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதைத்தொடர்ந்து தோனி கபடி குழு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தேன். அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆனேன். அப்போ ஒருவர் இவனுக்கு என்ன மார்க்கெட் இருக்கு? இவனை வச்சு படம் பண்ண போறீங்கன்னு தயாரிப்பாளர்களிடம் கூறினார்.

அதனால் எனக்கு அந்த நபர் சொன்ன மார்க்கெட் என்கிற வார்த்தை பெரிய மன கஷ்டத்தை கொடுத்தது. அந்த மார்க்கெட் என்ன என்பது பற்றி முழுமையாக கற்றுக் கொள்ள ப்ரொடக்ஷன் பக்கம் வந்தேன். இப்போ என்னுடைய பயணம் அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. குடும்பஸ்தன் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Sun TV kudumbasthan Movie

அந்த திரைப்படத்தில் நான் நடித்ததும் மை டியர் பூதம் மூசா என்று பலரும் என்னை அடையாளப்படுத்துவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்போ கூட நம்மை ஞாபகம் வைத்திருக்கிறார்களே என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் நடிகர் பிரசன்னா சார்தான்.

பிரசன்னா தான் இந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று சொன்னார். குடும்பஸ்தன் திரைப்படத்தில் தயாரிப்பு நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசராக வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று பிரசன்னா சார் சொன்னதும் தயாரிப்பாளரும் ஒத்துக்கிட்டாரு.

அதற்குப் பிறகு தயாரிப்பாளரும் என்னை மை டியர் பூதம் சீரியலை நினைவுபடுத்தி எல்லாரிடமும் அறிமுகப்படுத்தினார். அதுபோல மணிகண்டன் சாரும் ரொம்ப பாராட்டினார். அவரும் என்னை அடையாளப்படுத்தி பேசியது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது என்று அந்த பேட்டியில் பலருக்கும் மூசாவாக பிரபலமான அபிலாஷ் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+