நடிகர் அஜித்துக்கும், நடிகை ஹீராவுக்கும் காதலா? வதந்திங்க! நண்பர் ரமேஷ் கண்ணா உடைத்த ரகசியம்
சென்னை: நடிகர் அஜித் பற்றிய செய்திகள் தான் சில நாட்களாக சோசியல் மீடியா பக்கங்களில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருது கிடைத்த நேரத்தில் அவர் பற்றிய சில சர்ச்சைகளும் பரவி வந்தது. அஜித் குறித்து நடிகை போஸ்ட் போட்டதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலானது. அது குறித்து அஜித்தின் நண்பரான நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நடிகராகவோ, சாதாரண மனிதராகவோ இருந்தாலும் சரி ஒருவர் பிரபலம் ஆகி வருகிறார், தன்னுடைய உழைப்பால் உயர்ந்து வருகிறார் என்றாலே சுற்றி இருப்பவர்களுக்கு பிடிக்காது. அவர் பற்றி பழிகளையும் தேவையில்லாத வதந்திகளையும் பரப்பி வருவார்கள். இந்த பஞ்சாயத்து பக்கத்து வீட்டில் நீங்கள் பலரும் பார்த்திருக்கலாம் அதே சம்பவம் தான் இப்போது நடிகர் அஜித்துக்கு சோசியல் மீடியா பக்கங்களில் நடந்தது.

வதந்தி
நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து அவர் டெல்லிக்கு விருது வாங்குவதற்காக சென்றிருந்தார். அந்த நேரத்தில் அவர் பற்றி சில வதந்திகளும் பரவி வந்தது. அதாவது நடிகை ஹீரா என்கிற சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அஜித் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், சுயநலவாதி பொய்யாக நடிக்கிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. இது நடிகை ஹீரா தான் போஸ்ட் போட்டாரா? அல்லது இது ஏதேனும் ஐடிவிங்கில் இருந்து இப்படி தவறான செய்திகள் பரப்பப்பட்டிருக்கிறதா என்ற கேள்விகளும் இருந்தது.
அஜித்தின் நண்பர்
காரணம் அந்த பதிவு வெளியிட்டு சில மணி நேரங்களில் சோசியல் மீடியா பக்கம் எல்லாம் அஜித் பற்றி விவாதம் தொடங்கி இருந்தது. அந்த நேரத்தில் அந்த பதிவு காணாமல் போய் இருந்தது. இதனால் ரசிகர்களும் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் நடிகர் அஜித் பற்றி ரமேஷ் கண்ணா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அஜித்துடன் ரமேஷ் கண்ணா அட்டகாசம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், நீ வருவாய் என, உன்னை கொடு என்னை தருவேன், வீரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ரமேஷ் கண்ணா விளக்கம்
இவர்கள் இவருடைய நட்பும் பலருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில் அஜித் பற்றி அவரிடம் ஹீராவுக்கும் அஜித்துக்கும் இடையில் காதல் இருந்ததா என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, அப்படியெல்லாம் கிடையாது. அஜித் அப்படிப்பட்டவரும் கிடையாது. ஹிராவுடன் காதல் என்றால் எப்படி ஷாலினியை திருமணம் செய்து இருப்பார்? சினிமாக்காரங்க என்றாலே ஏதாவது எழுத தான் செய்வாங்க. அப்படித்தான் இதுவும் என்று சுருக்கமாகவே விளக்கம் கொடுத்து முடித்திருக்கிறார்.

காதல் கிசுகிசு
இதை அஜித்தின் ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அஜித் காதல் கோட்டை திரைப்படத்தின் போது தான் முதல் முறையாக ஹீராவுடன் இணைந்து நடித்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் இருவரும் வெளியே ஒன்றாக சுற்றி இருக்கிறார்கள். அதுபோல அந்த காலகட்டத்தில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது.
ரசிகர்களின் குற்றச்சாட்டு
காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு தொடரும் திரைப்படத்தில் அஜித் உடன் மீண்டும் இணைந்து நடித்திருந்தார். பிறகு இருவரும் சேர்ந்து எந்த திரைப்படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் இப்போது அஜித்தின் புகழை கொடுப்பதற்காக சிலர் வேண்டும் என்று இப்படி பரப்பி விட்டு இருக்கிறார்கள் என்பது அஜித் ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
முகம் முழுக்க சோகம்.. தாயார் மறைவால் துபாயில் இருந்து சென்னை வந்த அஜித்குமார் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications