அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ஷாலினி வெளியிட்ட போட்டோஸ்.. இதை கவனிச்சீங்களா? குவியும் வாழ்த்து
சென்னை: மே ஒன்றாம் தேதியான இன்று நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய மனைவி ஷாலினி அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். அஜித்துக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மே ஒன்றாம் தேதி என்றாலே எல்லோருக்கும் உழைப்பாளர் தினம் தான் நினைவுக்கு வரும். ஆனால் அன்று தான் அஜித்குமாரின் பிறந்தநாள் என்பதால் அவருடைய ரசிகர்கள் அதை திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சில வாரங்களாகவே அஜித் குறித்த செய்திகள் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் அவருக்கு மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறது.

அஜித்தின் ஹிட் திரைப்படம்
இந்த திரைப்படத்தில் அஜித் நடிப்பை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அஜித்துக்கு பத்மபூஷன் விருதும் கிடைத்தது. இதுவும் பெரிய அளவில் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல அஜித் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்து ஹிட்டான பில்லா, வீரம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
அஜித் பேட்டி
அஜித்துக்கு இந்த பிறந்தநாள் ஸ்பெஷல் ஆகத்தான் இருக்கிறது. அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருக்கிறது. தன்னுடைய வெற்றிக்கு காரணம் தன்னுடைய மனைவி என்று பல இடங்களில் அஜித் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். அஜித் பற்றி சில வதந்திகள் பரவி வந்தாலும் அவரும் அவருடைய குடும்பத்தினரும் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை.
அஜித்தின் 54 வது பிறந்தநாள்
இந்த நிலையில் அஜித் தன்னுடைய 54 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். சோசியல் மீடியா பக்கங்களில் ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் அஜித்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். ஆனால் அந்த புகைப்படங்கள் இந்த வருஷம் எடுத்தது கிடையாது.

அஜித் பிறந்தநாள் புகைப்படங்கள்
கடந்த வருடம் எடுத்த புகைப்படங்கள் தான். கடந்த பிறந்தநாளில் அஜித்க்கு ஷாலினி விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார். அந்த பைக்கில் இருவரும் ஜோடியாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது என்னுடைய வாழ்வில் வாழ்நாளில் சிறந்த நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும் என்று அந்த புகைப்படங்களை ஷாலினி இப்போது பகிர்ந்து இருக்கிறார்.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
அஜித் பத்மபூஷன் விருது வாங்கும்போது தன்னுடைய சந்தோஷத்தை ஷாலினி வெளிப்படுத்தி இருந்தார். அதுபோல ஷாலினி அஜித்தின் கைகளை பிடித்து இழுத்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இப்போது அஜித்துடைய கடந்த வருட பிறந்தநாள் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications