8 மாதத்தில் 42 கிலோ எடை குறைப்பு! இப்படித்தான் சாத்தியமாச்சு! அஜித்தின் ஓபன் பேச்சு.. நோட் பண்ணுங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் அவருடைய உடல் எடை குறைப்பு குறித்து பேசி பலருக்கும் மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். எட்டு மாதத்தில் எப்படி 42 கிலோ எடையை குறைக்க முடிந்தது என்று அஜித் விளக்கம் அளித்திருக்கிறார்.

பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் பலரை பார்த்திருப்போம், ஏன் நமக்கும் கூட ஒரு வேலை மிகவும் பிடித்ததாக இருக்கும். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் பிடிக்காத ஒரு வேலையை செய்து கொண்டிருப்போம். வாழ்க்கையில் நமக்கு பிடித்த விஷயங்களில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் இருக்கும். ஆனால் எல்லோராலும் நினைத்த வேலை மற்றும் நினைத்த செயல்களை செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் என்னதான் வேலைகள் இருந்தாலும் தங்களுடைய மனதிற்கு பிடித்த வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Ajith Kumar Tamil actor

அஜித்தின் திறமை

அதுபோலத்தான் நடிகர் அஜித்குமாரும் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தாலும் தனக்கு பிடித்த கார் ரேஸில் கலந்துகொண்டு பலருக்கும் வியப்பை ஏற்படுத்திகிறார். சில நேரங்களில் திடீரென்று உடல் எடை கூடி கெத்து காட்டுகிறார். திடீரென்று உடல் எடையை குறைத்து இது அஜித்தா என்று வியக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இவருடைய மாற்றம் ரசிகர்கள் மத்தியிலும் ட்ரண்டு ஆக பாலோ செய்யப்படுகிறது.

புது ஸ்டைல்

வயதாகி விட்டாலோ, தலை முடி நரைத்து விட்டாலே அதற்கு டை அடித்து வெளியே தெரியாமல் மறைப்பவர்கள் அதிகம். ஆனால் வெள்ளை முடி வந்துவிட்டால் அதுவும் ஒரு அழகுதான் என்று எல்லோருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவரும் அஜித் தான். சமீபத்தில் அவர் குட் பேட் அக்லி திரைப்படத்தில் உடல் எடை அதிகமாகவும், குறைவாகவும் இரண்டு வித்தியாசத்தையும் காட்டி இருந்தார்.

அஜித்தின் உடல் எடை குறைப்பு

இந்த நிலையில் 8 மாதத்தில் தான் 42 கிலோ எப்படி எடை குறைத்தேன் என்று பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது கார் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு நிறைய உடல் தகுதி தேவைபட்டது. எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையை குறைந்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் எடை குறைக்கும் வேலையை தொடங்கினேன்.

வெஜிடேரியன்

அதற்குப் பிறகு உணவு முறை அளவு கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் மூலமாகத்தான் நான் என்னுடைய உடல் எடையை குறைத்தேன். "நான் ஒரு டீ டோட்டலராகவும், வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். பந்தயத்திற்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். பந்தயத்திற்காக திரைப்படத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன். கார் பஞ்சாயத்துக்காகவே எனது உடற்பகுதியை நான் பராமரித்து வருகிறேன்" என்று அந்த பேட்டியில் அஜித்குமார் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+