குறைந்த சம்பளம்தான்.. ஆனாலும் 30 பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்த சேஷு அண்ணா.. அமுதவாணன் உருக்கம்
சென்னை: நடிகர் சேஷு, சிரிக்க வைப்பதை தாண்டி அனைவருக்கும் உதவி செய்யும் குணம் படைத்தவர் என நடிகர் அமுதவாணன் தெரிவித்துள்ளார். நடிகர் சேஷு மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பண உதவியை நாடி வரும் நிலையில் அமுதவாணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லொள்ளு சபா நடிகர் சேஷுவுக்கு குறைந்த அளவிலான சம்பளமே கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர் அந்த பணத்தில் நிறைய பேருக்கு உதவியுள்ளார் என அமுதவாணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேபிஒய் அமுதவாணன் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், சேஷு அண்ணா எல்லாருக்குமே உதவி செய்வார். சிரிக்க வைப்பதை தாண்டி உதவி செய்யும் குணம் அவருக்கு மிகவும் அதிகமாக இருக்கிறது.
சேஷு அண்ணா பெரிய வேலை எல்லாம் பார்க்கவில்லை. சின்ன சின்ன வேலை செய்வார். அதில் வரும் வருமானங்களை வைத்து பல பேருக்கு உதவி செய்து உள்ளார். நானே நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன். என்னை பல இடங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறார். "நிகழ்ச்சி எல்லாம் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். நீ சென்று உதவி செய்" என சொல்வார்.
சேஷு அண்ணாவிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். லொள்ளு சபா நிகழ்ச்சி சற்று டல்லாக சென்ற நாட்கள் கூட இருந்தன. அப்போது சின்ன சின்ன நிகழ்ச்சிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு உதவி செய்தார். கொரோனா காலத்தில் நிறைய விழிப்புணர்வு செய்தார். திருமணம் செய்ய முடியாமல் வறுமையில் இருந்த 30 பேருக்கு திருமணம் செய்து வைத்தார். பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுத்துள்ளார். இவ்வாறு அமுதவாணன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற ஒரு நிகழ்ச்சி பிரபலமடைந்தது. இதில் சந்தானம், ஜீவா, மனோகர், சேஷு, மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த நிகழ்ச்சி 2004 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டு வந்தது.
பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை காமெடியாக மாற்றி லொள்ளு சபாவில் கலாய்த்திருப்பார்கள். அதில் காந்திமதி நடித்த ஓச்சாயி கிழவி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் சேஷு. இதன் மூலமும் அவர் பிரபலமானார்.
இதன் மூலமாகத்தான் மேற்கண்ட நடிகர்களும் நடிகையும் சினிமாவுக்கு வந்தனர். அந்த வகையில்தான் சேஷுவும் லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இவர் சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோருடன் நடித்திருந்தார்.
சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடைய சிகிச்சைக்கு ரூ 10 லட்சத்திற்கு மேல் செலவாகிறதாம். இதனால் சேஷுவின் உயிரை காப்பாற்ற பொதுமக்களும் ரசிகர்களும் ரூ 10 லட்சம் நன்கொடையாக கொடுத்து உதவும்படி அவருடைய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications