அய்யனார் துணை சோழன் வாழ்க்கையில் நடந்த துயரம்! துடி துடிக்க போன பெற்றோர் உயிர்! கலங்கிய மனைவி
சென்னை: தமிழகத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்குடன் திகழும் தொலைக்காட்சி விஜய் டிவி. இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பிப் பார்க்கும் சேனலாக இது உள்ளது. வருடந்தோறும், விஜய் டிவி கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்படுகின்றன. சமீபத்தில் நடைபெற்ற 10-வது விஜய் டெலிவிஷன் விருதுகள் விழாவில், நடிகர் அரவிந்த் பெற்ற விருது, அவருடைய வாழ்க்கையில் உள்ள பெரும் சோகத்தையும், அதிலிருந்து அவர் மீண்டு வந்த போராட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

யார் இந்த அரவிந்த்
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் அரவிந்த். அவன் இவன், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், சின்னத்திரைதான் அவருக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்தது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் சோழன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
அரவிந்தின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை
நடிகர் அரவிந்த், தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். கனா காணும் காலங்கள் சீரியலில் அவருடன் நடித்த நடிகை சங்கீதாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சங்கீதா, சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். ஒரு நேர்காணலில், சங்கீதா, "அரவிந்துக்கு சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டபோது தான், எங்களின் காதல் மலர்ந்தது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகி, பிறகு காதலித்தோம். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்" என்று கூறியிருந்தார்.
வாழ்க்கைப் போராட்டமும், சோகமும்
அரவிந்த், சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தபோது, அவரது பெற்றோர்கள் கொரோனா நோய்த்தொற்றால் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தார்கள். இந்தத் துயரம், அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பெற்றோர்களை இழந்த சோகம், பொருளாதாரப் போராட்டங்கள் எனப் பல கஷ்டங்களை அனுபவித்த பிறகே அரவிந்த், இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார்.
பைண்ட் ஆஃப் தி இயர் விருது வாங்கியபோது, அரவிந்தின் வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்த ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதைப்பார்த்து அரவிந்த் மேடையிலேயே உணர்ச்சிவசப்பட்டு அழுதார். விருதை வாங்கிய பிறகும், அவர் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். இந்தச் சோகமான பின்னணி, பலருக்குமே தெரியாத ஒன்று.
அரவிந்த் உடைய கதை ஸ்கிரீனில் காட்டப்பட்ட போது அவருடைய மனைவி சங்கீதாவும் கண்கலங்கி அழுது இருந்தார். சங்கீதா சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல தொகுப்பாளனியாகவும் பணியாற்றி இருக்கிறார். விஜய் டிவியில் கடந்த வருடத்தில் முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியின் சீரியலிலும் நடித்திருந்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் சங்கீதா மற்றும் அரவிந்த் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் சங்கீதா இன்னும் நடிக்கவில்லை.
அரவிந்தின் வாழ்க்கை, ஒரு தனிமனிதன் எவ்வளவு கஷ்டங்களையும் கடந்து, தன் லட்சியத்தை அடைய முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவரது இந்த வெற்றி, அவரது கடின உழைப்புக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த உண்மையான அங்கீகாரம்.












Click it and Unblock the Notifications