மருமகனுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த நடிகர் அர்ஜுன்.. வீடு, கார் இல்ல.. அதுக்கும் மேல!
சென்னை: நடிகர் அர்ஜுன் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவின் கணவரான உமாபதிக்கு பெரிய பரிசு ஒன்று கொடுத்திருக்கிறார். அது வீடு, கார், பணம், நகை கிடையாது. அதுக்கு மேல பெரிய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அதாவது அர்ஜுன் இயக்கிய ஏழுமலை படத்தின் இரண்டாவது பாகத்தில் உமா பதியை அர்ஜுன் நடிக்க வைக்க போகிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று இப்ப வரைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கலக்கி இருக்கிறார். அதிலும் சின்னத்திரையையும் விட்டு வைக்காமல் சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தார்.

அதே நிகழ்ச்சியில் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமா பதியும் கலந்து கொண்டிருந்தார். அப்போது அர்ஜுனிடம் உமாபதி நல்ல மரியாதையை பெற்றிருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் உமாபதியும் அர்ஜுன் மகளும் காதலிக்க தொடங்கி இருந்தனர். இவர்களுடைய காதல் விஷயம் வீட்டாருக்கும் தெரிய வந்தபோது இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர்.
பிறகு எளிமையாக எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து சமீபத்தில் தான் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக இவர்களுடைய வாழ்க்கை பயணம் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் உமாபதிக்கு அர்ஜுன் பெரிய ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
அதாவது அர்ஜுன் இயக்கத்தில் வெளியான ஏழுமலை திரைப்படத்தை இரண்டாவது பாகத்தை அர்ஜுன் மீண்டும் இயக்க இருக்கிறாராம். அந்த படத்தில் நடிகர் உமாபதி தான் கதாநாயகனாக நடிக்கிறாராம். அது போல தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா கூறி இருந்த நிலையில் அவர்தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதுபோல இந்த திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் அர்ஜுன் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே வெளியான ஏழுமலை திரைப்படம் இப்ப வரைக்கும் பலருடைய ஃபேவரைட் வரிசையில் இடம் பிடித்திருக்கும். அதிலும் இதில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். அண்ணன்கள் மீது அதிகமான பாசம் வைத்திருக்கும் தம்பி, தன்னுடைய அண்ணன்கள் அலட்சியம் செய்தாலும் விட்டுக் கொடுக்காமல் அவர்கள் மீது கண்மூடித்தனமாக அன்பு காட்டுவது, பிறகு அண்ணன்கள் தம்பியின் பாசத்தை புரிந்து கொள்வது என்று இந்த படம் ஒரு வித்தியாசமான கதையோடு இருந்தது.
அதிலும் தன்னுடைய கணவர் அண்ணன்கள் மீது அதிகமான பாசம் வைத்து ஏமாந்தாலும் தன்னுடைய கணவருக்காக பக்க பலமாக இருக்கும் கேரக்டரில் நடிகை சிம்ரன் நடித்திருந்தார். அதுபோல மும்தாஜ் அந்த திரைப்படத்தில் சில காட்சிகளில் வந்திருந்தாலும் அவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தார். அதிலும் லக்ஸ் பாப்பா, எல்லாம் மலையிலும் நல்ல மழை இந்த ஏழுமலை போன்ற பாடல் அந்த படத்தில் பெரிய ஹிட் ஆனது.
இந்த நிலையில் சமீபத்தில் இரண்டாவது பாகம் எடுக்கும் திரைப்படங்கள் அதிகமாக ஃபிளாப் ஆனாலும் ஏழுமலை திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தோடு வெற்றி பெற வேண்டும் என்று அர்ஜுனின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு ரியல் லைப்பில் கணவன் மனைவியாக இருக்கும் ஜோடி இந்த திரைப்படத்தில் ஜோடியாக முதல்முறையாக நடிக்க இருக்கிறார்கள். அவர்களுடைய கூட்டணி எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications