அருண்பாண்டியன் வீட்டில் விசேஷம், வெட்கத்தில் மனைவி! மகள்கள் கொடுத்த சர்ப்ரைஸ்.. இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கலையே
சென்னை: நடிகர் அருண்பாண்டியன் மற்றும் அவருடைய மனைவி இணைந்து அறுபதாவது கல்யாண விழா கொண்டாடிய புகைப்படங்கள் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அருண் பாண்டியனின் அறுபதாவது திருமண கொண்டாட்டத்தில் அவருடைய மூன்று மகள்களும் எடுத்த புகைப்படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அருண் பாண்டியன் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் 90ஸ் காலகட்டத்தில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிகமான திரைப்படங்களில் இவருடைய ஆக்ரோஷமான ஃபைட் பலருக்கும் பிடித்திருக்கும். அதிலும் இணைந்த கைகள் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலருக்கும் இப்போ வரைக்கும் பேவரைட்டாக இருக்கிறது. கடந்த 2000 வரைக்கும் சினிமாக்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அருண் பாண்டியன் அதற்கு பிறகு மெல்ல மெல்ல சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

அருண்பாண்டியன் கம்பேக்
தன்னுடைய சொந்த ஊரில் விவசாய பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார். அதுபோல அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் இப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் பாண்டியன் சில வருட இடைவெளிக்கு பிறகு டிமான்டி காலனி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இப்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதுவும் தன்னுடைய மகள் நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அருண் பாண்டியன் நடிக்கிறார்.

அறுபதாவது கல்யாண விழா
அருண் பாண்டியனுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். அதில் கீர்த்தி பாண்டியன், கிரானா பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் மூன்று பேரும் அருண்பாண்டியனின் 60-வது கல்யாண மேடையில் எடுத்த புகைப்படத்தில் இடம் பிடித்திருக்கின்றனர் . அருண்பாண்டியனின் அறுபதாவது கல்யாண புகைப்படங்களை பார்த்ததும் சிலர் அவருக்கு கல்யாணம் முடிந்து 60 வருடமாகி விட்டதா? என்று வியப்போடு கேட்டு வருகிறார்கள். ஆனால் 60-வது கல்யாணம் என்பது இந்து மதத்தில் நடைபெறும் ஒரு சடங்கு. இந்த சடங்கில் தம்பதிகளில் ஆண் மகன் 60 வயதை அடையும்போது 60-வது கல்யாணம் என்ற சடங்கு நடத்தப்படும்.

ஏழு வருடம் முன்பு எடுத்தது
அது போன்ற சடங்கு தான் அருண்பாண்டியனுக்கு அவருடைய அறுபதாவது வயதில் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு அருண் பாண்டியனுக்கு 60-வது திருமண நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் அப்போது தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களிலும் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications