அப்பவே விஜயகுமார் மகள் அனிதா கல்யாணத்தில் இவ்வளவு பிரச்சனையா? ரகசியத்தை உடைத்த அருண் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமண செய்திதான் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகுமாரின் குடும்ப புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் விஜயகுமாரின் மகள் அனிதாவின் திருமண ரகசியத்தை பற்றி அருண்குமார் உடைத்திருக்கிறார்.

அதாவது விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா டாக்டர் ஒருவரை காதலிக்கும் போது அந்த காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும் அருண் விஜய் தன்னுடைய அக்கா கவிதா மற்றும் உறவினர்களோடு சென்று பெரிய பிரச்சனை செய்திருந்தாராம். அதற்குப் பிறகு எப்படி இவர்களுடைய திருமணம் நடைபெற்றது என்பதை பற்றி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

 Actor Arun Kumar has broken the secret of Vijayakumars daughter Anithas marriage

அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தை பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. அதில் நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது எல்லோருக்குமே தெரியும். நல்ல கண்ணு என்பவரை முதலில் திருமணம் செய்திருந்த விஜயகுமார் பிறகு அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

 Actor Arun Kumar has broken the secret of Vijayakumars daughter Anithas marriage

இந்த நிலையில் விஜயகுமாருக்கு கவிதா, அனிதா, அருண் குமார், வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மகள்கள் மற்றும் மகன் இருக்கின்றனர். இதில் எல்லோருமே திரை துறையை சார்ந்தவர்கள் தான். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை அனிதாவின் மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா கூலி என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்திருந்தார்.

 Actor Arun Kumar has broken the secret of Vijayakumars daughter Anithas marriage

அதற்குப் பிறகு அவருக்கு அதிகமான திரைப்பட வாய்ப்புகள் வந்த போதிலும் அதில் நடிக்க மறுத்த அனிதா காலேஜ் படித்துக் கொண்டிருந்தாராம். அப்போது தன்னிடம் ஒரு நபர் அடிக்கடி வருகிற போகிற இடங்களில் எல்லாம் பிரச்சனை பண்ணுகிறார் என்று தன்னுடைய தம்பி அருண் விஜய்யிடம் கூறியிருக்கிறார். உடனே அருண் விஜய் தன்னுடைய உறவினர்கள் எல்லோரையும் கூட்டிட்டு போய் அந்த நபருக்கு வார்னிங் கொடுத்திருக்கிறார்.

 Actor Arun Kumar has broken the secret of Vijayakumars daughter Anithas marriage

எங்க அக்காவுக்கு பிரச்சனை இனி உங்களால் வந்துச்சுனா நடக்கிறதே வேற என்று இவர் மிரட்டிட்டு வந்திருக்கிறார். ஆனால் இவர்கள் மிரட்டிய கொஞ்ச நாளில் அனிதாவும் அந்த நபரும் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுட்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அருண் விஜய்யின் உறவினர் ஒருவர் அங்கு போய் இருக்கிறார். அவர் அனிதாவை பார்த்ததும் அனிதாவை கையைப் பிடித்துக் கொண்டு அங்கேயே நிற்க வைத்து அருண்குமாருக்கு போன் போட்டு இருக்கிறார்.

 Actor Arun Kumar has broken the secret of Vijayakumars daughter Anithas marriage

அருண் விஜய் உடனே கவிதாவிடம் சொல்ல கவிதா வா போகலாம் என்று இன்னும் ஒரு சில உறவினர்களை கூட்டிக்கொண்டு அந்த ஹோட்டலுக்கு போய் விட்டாராம். அங்கு எல்லோரும் அனிதாவோடு கூட இருந்த நபரை ரவுண்டு கட்டி இருக்கிறார்கள். அப்போது அவர் நாங்கள் எதுவும் தப்பா பேசல நாங்க இருவரும் விரும்புகிறோம் இப்போ ஒரு பிரண்ட்லியா தான் இங்க சாப்பிட வந்திருக்கோம்.

 Actor Arun Kumar has broken the secret of Vijayakumars daughter Anithas marriage

அதற்கு எதற்கு இவ்வளவு பிரச்சனை பண்ணுறீங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு பிறகு இவர்களுடைய காதல் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. ஆரம்பத்தில் விஜயகுமார் வீட்டில் அனிதாவின் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லையாம். ஆனால் அனிதாவின் பிடிவாதத்தால் குடும்பத்தை தன்னுடைய திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இது பற்றி அருண் விஜய் பேசுகையில், அனிதாவின் கணவர் ஒரு டாக்டர் மற்றும் நல்ல குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் எங்கள் வீட்டிலும் எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் இப்போதும் அனிதா அக்கா கணவர் முன்பு நாங்கள் நிற்கும் போது எங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறது. ஐயோ தேவையில்லாம என்னவெல்லாம் வேலை பண்ணி இருக்கோம் என்று இப்போது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் அருண் விஜய் மற்றும் கவிதா இருவரும் பேசி இருக்கின்றனர்.

அதுபோல விஜயகுமார் வீட்டில் மூத்த மகள் கவிதாவுக்கு தான் அதிகமான அதிகாரம் இருக்கிறதாம். வீட்டில் கவிதா சொல்வதை தான் எல்லோரும் கேட்பார்களாம். அதிலும் ஆரம்பத்தில் கவிதா அதிகமாக கோபப்படுவார் என்று அருண் விஜய் மட்டுமல்லாமல் நடிகை ஸ்ரீதேவியும் கூறி இருக்கிறார். அதுபோல பேட்டி ஒன்றில் வனிதாவும் இதையே கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+