பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகமாகும் தெய்வமகள் சீரியல் நடிகர்..இனி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை போல
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நண்பராக நடிகர் அரவிந்த் கதாரே அறிமுகம் ஆகிறார்.
இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து இருக்கிறார்.
தெய்வமகள் சீரியலில் பிரகாஷின் இரண்டாவது அண்ணனாக அரவிந்த் நடித்திருப்பார்.

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு இந்த சீரியலில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு முறையும் கோபி நான் இனி குடிக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டு குடித்துக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் கோபியை எப்படியாவது நம்முடைய வீட்டிலே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி நினைத்துக் கொண்டிருக்க, கோபி பின்னாடியே ராதிகாவும் பாக்யாவின் வீட்டில் வந்து இருந்து கொண்டு, இனி நான் இங்கிருந்து போகமாட்டேன் என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பாக்கியா இனி அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
அதே நிலையில் இன்றைய எபிசொட்டிலும் கோபி குடித்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வருகிறார். இதனால் இனி என்ன பிரச்சனை ஏற்படப்போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதே நேரத்தில் கோபியின் நண்பராக சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் கதாநாயகன் பிரகாஷின் இரண்டாவது அண்ணனாக நடித்த அரவிந்த் இந்த சீரியலில் அறிமுகமாகிறார்.
ஏற்கனவே தெய்வமகள் சீரியலில் ராஜூ கேரக்டரில் பார்த்த அரவிந்த் தற்போது இந்த சீரியலில் புதியதாக அறிமுகமாக இருக்கும் நிலையில் கோபி கேரக்டரில் நடித்துவரும் சதீஷ் நானும் இந்த சீரியலை விட்டு விலகப் போகிறேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் நேற்று தான் இந்த வீடியோவை வெளியிட்டார். இந்த நிலையில் திடீரென்று இந்த சீரியலில் புது கேரக்டர் இன்று அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இனி என்ன மாதிரி எல்லாம் திருப்பங்கள் வரப்போகிறது?. உண்மையில் கோபியாக நடிக்கும் சதீஷ் 10, 15 எபிசொட்டில் விலகி விடுவாரா? அல்லது மனம் மாறி மீண்டும் தொடர்வாரா? என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது.இந்த நேரத்தில் கோபியின் நண்பராக அரவிந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் , இந்த நிலையில் இன்றைய முதல் நாளிலே அரவிந்த் கோபியை திட்டுவது போன்று தான் எபிசோடு இருக்கிறது. அதனால் இனிவரும் நாட்களில் எப்படி கதை இருக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications