கெத்தாக ஆட்டம் போட்ட ரோபோ சங்கர்..ஆர்யா கொடுத்த பதில்.. மகள் சொன்ன வார்த்தையை கேட்டீங்களா?
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் அவருடைய மனைவியோடு டான்ஸ் ஆடிய வீடியோவை அவருடைய மகள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆர்யா தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதற்கு ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் பதில் கொடுத்திருக்கிறார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ சங்கர் எடை குறைந்தது தான் குறைந்தார். அதை குறித்து சமூக வலைத்தளத்தில் அவரைப் பற்றி தான் அதிகமான பேச்சு வலம் வருகிறது.
இந்த நிலையில் ரோபோ சங்கர் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சேர்ந்து "வேட்டிய மடிச்சு கட்டி குத்தாட்டம் ஆடுனா" எனும் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். உடல்நிலை குறைந்திருந்த ரோபோ சங்கர் மீண்டும் தன்னுடைய ஃபார்முக்கு வந்து டான்சர் மனைவியோடு போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வீடியோவை வெளியிட்ட ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் அந்த வீடியோவிற்கு, "கறி குழம்பு வாசம்... ஆர்யா சார் மற்றும் முத்தையா சாருக்கு மட்டும்தான்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதற்கு நடிகர் ஆர்யா," நீங்கள் இருவரும் மிகவும் இனிமையானவர்கள் லவ் யூ " என கமெண்ட் கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஆர்யாவின் கமெண்டுக்கு இந்திரஜா சங்கர் லவ் யூ டூ சார் என்று பதில் கமெண்ட் கொடுத்திருக்கிறார். இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நாங்கள் கமெண்ட்களில் பல்வேறு கேள்விகளை உங்களிடம் கேட்கிறோம். ஆனால் அதற்கெல்லாம் ஒரு கருத்து கூட கூறாமல் ஆர்யாவிற்கு மட்டும் பதில் கூறுகிறீர்களே என்ன என்று செல்லமாக கோபித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னுமே சமூக வலைதளத்தில் அதிகமானோர் ரோபோ சங்கர் உடல்நிலை குறைந்தது குறித்து பல்வேறு வதந்திகளை பரப்பி கொண்டிருக்கும் நிலையில் அவர் இப்போது ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் என்பதை சொல்லும் பொருட்டு அடிக்கடி இந்திரஜா மற்றும் ரோபோ சங்கர் மனைவியான பிரியா சங்கர் அடிக்கடி ரோபோ சங்கரோடு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேஷ்டி சட்டையில் பழைய நிலையில் மீண்டும் ஆட்டம் போட்ட ரோபோ சங்கர் குறித்து அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர் பழையபடி மாறிவிட வேண்டும் என்பது பலருடைய விருப்பமாகவும் ஆசையாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications