Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லவேளை கல்யாணம் நடக்கல.. பட்டதே போதும்.. பப்லு பற்றி வெளிப்படையாக பேசிய முன்னாள் காதலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பப்லு பிரித்விராஜ் காதலித்து வந்த சீத்தல் தான் எதற்காக பப்லுவை பிரிந்தேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் நிலையில் இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அந்த பேட்டியில் நல்லவேளை நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நமக்கு ஒரு வாழ்க்கை சரி இல்லை என்று ஆகிவிட்டால் உடனே அதிலிருந்து வெளியே வந்து விட வேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து இருக்கிறேன் என்றும் சீத்தல் கூறியிருக்கிறார்.

தற்போதுள்ள இளைஞர்களும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு ஒரு சில நடிகர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் பப்லு. இவர் 57 வயதானாலும் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் டயட் காரணமாக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கி வரும் இவர் உடைய இமேஜ் தற்போது சமூக வலைத்தளத்தில் டேமேஜ் ஆகி இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

Television Bablu Prithiviraj

இதற்கு முக்கிய காரணமே பப்லுவின் வெளிப்படையான பேச்சு தான். சில மாதங்களுக்கு முன்பு பப்லு இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்ற செய்திகள் பரவி வந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்கிற பெயரில் பப்லு அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம்.

நான் என்னுடைய முதல் மனைவியை பிரிந்து விட்டேன். என்னுடைய முதல் மனைவிக்கு நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கும். என்னுடைய மகன் கூட இதைக் கேட்டு வருத்தப்பட்டான் ஆனாலும் எனக்கு என்னுடைய சந்தோஷத்தையும் பார்க்க வேண்டும். இத்தனை வருடங்களாக நான் என்னுடைய வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று பேசி இருந்தார்.

அதுபோல இந்த வயசில் உங்களுக்கு பொம்பள சோக்கு கேக்குதா என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் எனக்கு கேக்குதே என்ன செய்ய..? என்னுடைய மனைவி எனக்கு தராத விஷயங்களை ஷீத்தல் எனக்கு தருகிறாள். அதனால் எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று வெளிப்படையாகவே பப்லு பேசியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பப்லு மட்டும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் சேர்த்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று கேள்வி இணையத்தில் அதிகமாக எழுந்து வரும் நிலையில் இது குறித்து பப்லு பேட்டிகளில் மழுப்பலாக பேசி வருகிறார்.

Television Bablu Prithiviraj

இந்த நிலையில் பப்லு உடல் தேவைக்காக மட்டும்தான் ஷீத்தலை பயன்படுத்திக் கொண்டார் என்று பிரபல பத்திரிக்கையாளான பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்திருந்தார். அதுபோல ஷீத்தல் உடலுறவு தேவையை பப்லுவால் நிவர்த்தி செய்ய முடியவில்லை, வயசாகி விட்டதல்லவா அதனால் தான் ஷீத்தல் பிரிந்து விட்டார் என்றும் பயில்வான் பேசியிருந்தார்.

இப்படி தன்னைப் பற்றி பல வதந்திகள் பரவி வரும் நேரத்திலும் ஷீத்தல் இது குறித்து எந்த இடத்திலும் விளக்கம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு பேட்டியில் பப்லு பற்றி சீத்தல் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், எங்களுக்குள் என்ன என்றாலும் நடந்திருக்கலாம். ஆனால் அது ஒரு விஷயமே இல்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என்று நினைத்து இருவரும் பிரிந்து விட்டோம். அது மட்டுமல்லாமல் காதலிக்கும் போது அவர் எனக்கு கொடுத்த அத்தனை பொருட்களையும் பிரித்விராஜிடமே நான் ஒப்படைத்து விட்டேன்.

முதல் முதலாக அவர் எனக்கு ப்ரொபோஸ் பண்ணும் போது ஒரு மோதிரம் கொடுத்தார். அதையும் அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். அதோடு நல்லவேளை எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை, அதுவரைக்கும் சந்தோஷம். ஏனென்றால் எங்களுக்கு திருமணம் நடந்திருந்தால் அது இரு வீட்டாரையும் பாதிக்கும். அதை நினைத்து நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் அவரோடு லிவிங்கில் இருக்கும்போது திருமணத்திற்கும் காதலுக்கும் வயது ஒரு பிரச்சனையே கிடையாது என்று சொல்லி இருந்தேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். ஒருவர் மீது காதல் வருவதற்கு வயது ஒரு காரணமே கிடையாது. வயது என்பது வெறும் நம்பர் தான். உண்மையான மனதுதான் காரணம். சில காரணங்களை வெளியிலே வெளிப்படையாக சொல்ல முடியாது.

அது வெளியே தெரியாமல் இருப்பதே நல்லது என்று சீத்தல் பேசி இருக்கும் நிலையில் உங்களுடைய வாழ்க்கையில் வேறு யாரேனும் வந்திருக்கிறார்களா? என்று கேட்ட கேள்விக்கு, ஒருத்தரை வைத்து பட்டதே போதும். இனி என் வாழ்க்கையில் இன்னொரு நபர் என்பதே கிடையாது என்று சீத்தல் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+