Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவ்வளவுதானா? காதலியை பிரிந்த பப்லு பிருத்விராஜ் வெளியிட்ட வீடியோ..பதிலுக்கு பதில் பழிவாங்கும் படலமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பப்லு பிருத்விராஜ் சில மாதங்களுக்கு முன்பு தன்னைவிட வயதில் குறைந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் தான் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பல பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஷீத்தல் மற்றும் பிரித்விராஜ் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தாங்கள் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கின்றனர்.

Actor Bablu Prithviraj has shared a video of his birthday celebration without Sheetal

அதே நேரத்தில் ஷீத்தலிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் பிரிந்து விட்டீங்களா என்று கேள்வி கேட்டிருந்ததுக்கு அவர் லைக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் பப்லு ஷீத்தல் இல்லாமல் கொண்டாடிய பிறந்தநாள் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வந்த பிரித்விராஜ் இவரை சின்னத்திரை வட்டாரத்தில் பலர் பப்லு என்று அழைப்பது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிம்புவுடன் இவர் செய்த பிரச்சனை இவருக்கு பெரிய அளவில் ரீச்சை கொடுத்தது.

அதைத் தொடர்ந்து சின்ன திரையில் பிஸியாக நடித்து வரும் பிரித்விராஜ்க்கு கிட்டத்தட்ட 57 வயது என்று கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 23 வயதில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் காதலித்து திருமணம் செய்திருந்த தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து தனியாக பப்லு வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணுடன் இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக செய்திகள் வைரலானது. இடைத்தொடர்ந்து பப்லு பல பேட்டிகளில் எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறோம். எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் 30 வயதுக்கு மேலான வித்தியாசம் என்று இருக்கு என்று பேசி இருந்தார்.

அதனால் ரசிகர்கள் இதெல்லாம் சரியில்லை என்று கலாய்த்து கொண்டிருந்தனர். அதோடு இவர்கள் இருவரும் ஜோடியாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருவது 90ஸ் கிட்ஸ்களை மேலும் வெறுப்பு ஏற்படுத்தியது.. அதனாலேயே பலர் வயிற்றெரிச்சலில் இவர்களுக்கு கமெண்டில் சாபமிட்டு கொண்டிருப்பர்.

இந்த நிலையில் சில வாரங்களாகவே இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து எந்த வீடியோக்களும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ஷீத்தல் மற்றும் பப்லு இருவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தாங்கள் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை போட்டி போட்டு டெலிட் செய்திருக்கின்றனர். அதேபோல ஷீத்தல் லேட்டஸ்ட் ஆக வெளியிட்ட இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் ஆக வெளியிட்ட வீடியோ ஒன்றுக்கு ரசிகர் ஒருவர் நீங்க பிரிந்து விட்டீர்களா? இப்போது தனியா தான் இருக்கீங்களா என்று கேள்வி கேட்க, அதற்கு ஷீத்தல் லைக் கொடுத்திருக்கிறார்.

அப்போ இந்த வதந்தி உண்மைதான் என்பது தெளிவாகிவிட்டது என்று பலரும் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் நேற்று பப்லுவின் பிறந்தநாள் அவருடைய நண்பர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போதும் ஷீத்தல் அங்கு இல்லை. இதனால் இவர்கள் இருவரும் உண்மையில்தான் பிரிந்து விட்டார்கள் என்று 90ஸ் கிட்ஸ்கள் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தங்களை வெறுப்பேத்தி பார்த்தவர்களின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று சிலர் பீல் பண்ணி இருந்தாலும் இருவரும் தனித்தனியாக இருந்தாலும் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். இதனால் மீண்டும் இவர்கள் சேர்வார்களா? இல்லையா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+