Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெப்போலியன் தன் மகன் கல்யாணத்தில் இப்படி ஒரு விஷயம் செய்யப் போகிறாரா? கொளுத்தி போட்ட பயில்வான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் எங்கேஜ்மென்ட் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இடைத்தொடர்ந்து அவருடைய திருமணத்திற்காக நெப்போலியன் சில விஷயங்களை செய்யப் போவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

தமிழ் சினிமா துறையில் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவரான நெப்போலியன் ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக பல படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதிலும் அவருடைய நடிப்பில் சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் மணிமகுடமாக அமைந்தது.

Television Actor Napoleon

கதாநாயகனாக மட்டுமல்லாமல் போக்கிரி உட்பட சில படங்களில் முக்கிய கேரக்டர்களிலும் நெப்போலியன் நடித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அரசியலிலும் காலடி எடுத்து வைத்து மினிஸ்டராகவும் சில வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். அந்த நேரத்தில் தான் தன்னுடைய மகனின் உடல் நிலைக்காக சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி இப்போது குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்.

நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் இந்த தம்பதிக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் தனுசுக்கு நான்கு வயது இருக்கும் போது தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருப்பது நெப்போலியனுக்கு தெரிய வந்திருக்கிறது. அதற்கு பிறகு பல மருத்துவமனைகளில் இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் அதில் எல்லாம் பெரிய அளவில் தனுஷின் உடல்நிலை மாற்றம் ஏற்படாத போது திருநெல்வேலி பக்கத்தில் ஒரு கிராமத்தில் பாரம்பரிய முறையில் அளிக்கப்படும் சிகிச்சை பற்றி நெப்போலியனுக்கு தெரிய வர அங்கு தன்னுடைய மகனை குடும்பத்தோடு கூட்டிட்டு போயிருக்கிறார்.

பிறகு அங்கு செய்த சிகிச்சையில் தனுஷின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருக்கிறது ஆனாலும் முழுமையாக அங்கு சரியாகவில்லை அதே நேரத்தில் இந்த சிகிச்சையை ஆரம்பத்திலேயே அழித்தால் இதுபோன்று நோயால் பாதிக்கப்பட்ட பலருடைய உடல்நிலை சரியாகும் என்று நெப்போலியன் அங்கு ஒரு மருத்துவமனையை கட்டி தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவம் அளித்து வருகிறார்.

இந்த நேரத்தில் தான் நெப்போலியனின் மகன் அமெரிக்கா தனக்கு பிடிக்கும் என்று சொன்னதால் அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கிறார். அதிலும் தனுஷ் விமானத்தில் பயணிக்க கூடாது என்பதற்காக கப்பலில் தான் அமெரிக்காவிற்கு சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனுஷிற்கு இப்போது 25 வயதாகிறது அவருக்கு திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த விவேகானந்தன் என்பவருடைய மகள் அக்ஷயாவுடன் எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது.

என்கேஜ்மென்ட்க்கு தனுஷ் வர முடியாது என்பதால் தனுஷ் அமெரிக்காவில் இருக்கவும் நெப்போலியனும் அவருடைய மனைவியும் மணமகள் வீட்டிற்கு சென்று அங்கு வீடியோ காலில் எங்கேஜ்மென்ட் செய்து இருக்கிறார்கள். இந்த வீடியோக்கள் இரண்டு மூன்று தினங்களாக இணையத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் நெப்போலியன் தன்னுடைய மகனின் கல்யாணத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் என்று கூறி இருக்கிறார். அதில் அவர் கூறுகையில் மணப்பெண் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் திருநெல்வேலியின் வழக்கப்படி மணமகள் வீட்டிற்கு வந்து தான் மணமகன் திருமணம் செய்ய வேண்டும்.

ஆனால் மணமகன் தனுஷ் அமெரிக்காவில் இருக்கிறார். அவரால் விமானத்தில் வர முடியாது என்பதால் நெப்போலியன் குடும்பத்தோடு கப்பலில் வருவதற்கு சொகுசு கப்பலை புக் பண்ணி இருக்கிறார். ஆனாலும் திருமணம் தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்பதால் மணமகளை அமெரிக்காவிற்கே கூட்டிக் கொண்டு போய் அங்கே வைத்து திருமணம் செய்வதற்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

அதோடு பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தமிழ் சினிமாவில் அதிகமாக சர்ச்சையில் சிக்காத நடிகர்களில் நெப்போலியனும் ஒருவர், அவர் எம்எல்ஏவாக இருந்து மத்திய அமைச்சராக இருந்தது தமிழ் நடிகர்களுக்கு பெருமை சேர்த்தது என்று பல்வேறு விஷயங்களையும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இதற்கு இணையத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+