என் பொண்ணு லவ் மேரேஜ்தான்! ஆனா நல்லா பிளான் செய்தா! பெசன்ட் ரவி உருக்கம்
சென்னை: என் பொண்ணு லவ் மேரேஜ்தான். ஆரம்பத்துல எல்லா அப்பாக்களை போல் எனக்கும் கோபம் வந்தது. பிறகு... என தனது மகள் குறித்து உருக்கமாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் பெசன்ட் ரவி.

நடிகர் பெசன்ட் ரவி, சர்வைவர் நிகழ்ச்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு கலந்து கொண்டார். இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும் ஸ்வேதா என்ற மகளும் பிரணவ் என்ற மகனும் உள்ளனர். ரவி, சினிமாவில் நடித்தாலும் இரு குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்துள்ளார்.
பெசன்ட் ரவி பார்ப்பதற்கு முரடர் போல் இருந்தாலும் அவர் நிஜத்தில் அனைவருக்கும் உதவிகளை செய்வார் என்கிறார்கள். பெசன்ட் ரவி குறித்து அவரது ஏரியாவில் யாரை கேட்டாலும் சொல்லிவிடுவார்கள். இவர் வில்லன் கேரக்டரில் நிறைய நடித்துள்ளார்.
பெசன்ட் ரவி வீட்டில் பெண்களை நிறைய படிக்க வைக்க மாட்டார்களாம். ஆனால் ரவியோ தனது மகளை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்துள்ளார். அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் இவருடைய தம்பி பிரணவ், பிபிஏ படித்திருக்கிறார்.
பெசன்ட் ரவி 6 பள்ளி படிப்பை முடித்திருந்தாலும் 6 மொழிகளை பேசுவாராம். அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் ஒரு ஸ்டன்ட் சீனில் நூலிழையில் ரவி உயிர் தப்பினார். அப்போது அர்ஜுன்தான் ரவியை காப்பாற்றியதாக பலர் தெரிவித்திருந்தனர்.
இவர் போக்கிரி, சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெசன்ட் ரவிக்கு திருமணமான போது அவருக்கு 22 வயது, மனைவி பிரபாவதிக்கு 16 வயசுதானாம். சின்ன விஷயத்துக்கெல்லாம் ரவிக்கு கோபம் வந்துவிடுமாம். ஆனால் அவரை மனைவிதான் பத்திரமாக பார்த்துக் கொண்டாராம்.
இந்த நிலையில் தனது மகள் குறித்து பெசன்ட் ரவி கூறுகையில் என்னுடைய பொண்ணு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா. ஆரம்பத்துல எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிற கோபம் எனக்கும் இருந்தது. அப்புறம் பார்த்தா அவங்க ஸ்கூல் படிக்கும் போதே பிரண்ட்ஸ் போல! அதனால நல்லா பிளான் பண்ணி இருக்காங்க.
நான் ஒரு காலேஜ் ப்ரொபஸர் ஆக போகிறேன். நீயும் ஒரு வேலைக்கு செல் என சொல்லி இருவருமே நல்ல நிலைக்கு வந்ததும் என் கிட்ட வந்து காதல் குறித்து சொன்னாங்க என ரவி, உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இறந்த போதுகூட, பெசன்ட் ரவிதான் கடைசி வரை அவரது குடும்பத்திற்கு உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் வீடு தொடங்கி அவரது தந்தை தகனம் செய்யப்பட்ட பெசன்ட் நகர் மின்மயானம் வரை ரவிதான் உடன் இருந்து ஓடியாடி வேலைகளை செய்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications