ராதிகா மனசு யாருக்கும் வராது! என்னால அவங்க கையில் அவ்வளவு ரத்தம்.. ஆனாலும்! பாபூஸ் நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் பாபூஸ் பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். சினிமா வாழ்க்கையில் ராதிகா மற்றும் சரத்குமார் போன்ற நபர்களை நான் பார்த்தது இல்லை என்று கூறியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
சின்னத்திரையில் இருந்து வெளித்திரையில் காலடி எடுத்து வைத்து அங்கு ஜெயித்த நடிகர்கள் ஒரு சிலரை சொல்லலாம். அதில் தற்போது கூட சிவகார்த்திகேயன் பெரிய அளவில் பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கிய பாபூஸ் இப்பவரைக்கும் சினிமா மற்றும் சீரியல் என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகை ராதிகா சரத்குமாருடன் அரசி, வாணி ராணி சீரியலில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பாபூஸ் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் சினிமாவில் நான் பார்த்து வியந்த நடிகர் நடிகைகளில் சரத்குமாரையும், ராதிகாவையும் சொல்லுவேன்.
நான் ராதிகாவோடு பல சீரியல்களில் நடித்திருக்கிறேன். அவருக்கு அதிகமாக வில்லனாகத்தான் நான் நடித்திருக்கிறேன். அதிலும் அரசி சீரியலில் நடந்த ஒரு சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. அந்த சீரியலில் ராதிகா போலீசாக நடித்திருப்பாங்க. அதில் நான் பாண்டியன் என்ற கேரக்டர்கள் நடித்திருப்பேன்.
ஒரு காட்சியில் நான் ராதிகாவின் ரூமிற்கு கோபமாக போவேன். அப்போது ராதிகா உனக்கு ஒரு நிமிஷம் டைம் தரேன் அதுக்குள்ள இந்த இடத்தை விட்டு வெளியே போயிருன்னு சொல்லுவாங்க. ஆனா நான் நீ சொன்னதும் வெளியே போக நான் பயந்தவன் கிடையாது, நான் பாண்டியன்... என்று வீரமணி போல பெரிய வசனம் பேசுவேன்.
நான் ரொம்ப நேரம் பேசியதை கேட்டு கடுப்பாகி பக்கத்தில் இருந்த கண்ணாடியை ராதிகா ஓங்கி அடித்துவிட்டார். அதில் கண்ணாடி கையில் குத்தி கையெல்லாம் இரத்தம் வந்துவிட்டது. அப்ப கூட நீங்க பேசியது எனக்கு அப்படி டெம்ப் ஆகிவிட்டது, சூப்பரா பண்ணுனீங்க என்று என்னை பாராட்டுனாங்க. இப்படி எல்லாம் யாரும் செய்வாங்களா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவேன்.
காரணம் அரசி சீரியலில் கதாநாயகி ராதிகா தான். அது அவர்களுடைய சொந்த புரொடக்ஷன், தயாரிப்பாளர் என எல்லா வேலைகளும் ராதிகா தான் செய்றாங்க. ஆனால் என்னுடைய நடிப்பை அவங்க பாராட்டுனாங்க. அது எனக்கு வியப்பா இருந்தது. அப்புறம் அந்த காட்சி சீரியலில் வந்ததும் அதை சரத்குமார் பார்த்திருக்கிறார். அவர் இந்த நடிகர் நல்லா நடிக்கிறார். இவரை நம்ம படத்துக்கு பயன்படுத்திக்கணும் என்று சொல்லியிருக்கிறார்.
அதை அடுத்த நாள் ராதிகா என்னிடம் வந்து சொன்னாங்க. எனக்கு சந்தோசமா இருந்தது. அதுபோல சில வருடங்களுக்கு கழித்து எனக்கு சண்டமாருதம் திரைப்படத்தில் சரத்குமார் வாய்ப்பு தந்தாரு. அந்த படத்தில் கூட ஒரு காட்சியில் நானும் சரத்குமாரும் பேசுவது போல டயலாக் வரும். அப்போது சரத்குமார் என்னிடம் நாம ரெண்டு பேரும் லைவில் பேசுவோம் என்று சொன்னார்.
சரத்குமார் என்ன பேசப் போகிறார் என்று எனக்கு தெரியாது. ஏன் என்றால் நாங்கள் ஸ்கிரிப்ட் படி பேசவில்லை. லைவில் மனதில் தோன்றியதை பேசினார். சரத்குமார் பேசி முடித்ததும் நான் பேசினேன், பத்து நிமிஷத்துக்கு நான் பேசினேன் பிறகு பேசி முடித்ததும் சரத்குமார் என்னை பாராட்டினார். உடனே ராதிகாவுக்கும் போன் செய்து பாராட்டி இருக்கிறார்.
இவர் கண்டிப்பாக சினிமாவில் பெரிய ஆளா வருவாரு என்று சொல்லி இருக்கிறார். ராதிகா அடுத்த நாள் என்னிடம் சூட்டிங் ஸ்பாட்டில் சொன்னாங்க. அதற்குப் பிறகு எனக்கு பல திரைப்பட வாய்ப்பு கிடைத்தது இப்ப வரைக்கும் நான் சினிமா, சீரியல் என்று நடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் சரத்குமார் மற்றும் ராதிகாவின் பெருந்தன்மை வேறு யாருக்கும் வருமா என்று தெரியவில்லை. ஒரு நடிகரின் நடிப்பை உடனே பாராட்டுவாங்க. இவங்க நம்மை விட அதிகமா நடிச்சுட்டா நம்மளுடைய ஸ்கோர் குறைஞ்சிடுமே என்று ராதிகாவும் சரி சரத்குமாரும் சரி எந்த இடத்திலும் யோசிக்கவில்லை என்று பாபூஸ் நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications