கூடவே இருந்த “அந்த” நபர் செய்த அவமானம்.. ஆனால் விஜய் செய்தது இருக்கே.. ரகசியத்தை உடைத்த பிர்லா போஸ்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் வெளியாகி பலருடைய வரவேற்பை பெற்று வருகிறது.
அதே நேரத்தில் நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பிரபல நடிகர் பிர்லா போஸ் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பல பேர் இருக்கும் இடத்தில் நடிகர் விஜய்யை நான் உதாசீனப்படுத்திய விட்டதாக மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இப்போது மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அவர் நடிப்பில் வெளியான லியோ படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் பற்றிய பல்வேறு சுவாரசியமான தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் நடிகர் பிர்லா போஸ் பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும், வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பலருக்கும் பரீட்சையமானவர்தான். அவர் ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர்தான். அதிகமாக இவர் திரைப்படங்களில் போலிஸ் ஆபிஸர்களாகவும், சி.ஐ.டி அதிகாரிகளாகவும் கெத்தான கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் அதிகமான திரைப்படங்களில் பிர்லா போஸ் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் பற்றி சில தகவல்களை பேசி இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அந்த வீடியோவில் விஜய்யின் கூடவே ஒரு நபர் இருப்பார்.
அவர் யார் என்பதை இப்போது என்னால் சொல்ல விரும்பல. ஆனால் அவர் என்னிடமும் நல்லா பேசக் கூடியவர் தான். சிவகாசி படம் சமயத்தில் அந்த டைரக்டர் பிர்லா போஸை சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர சொல்லி இருக்கிறார். அப்போது ஓப்பனிங் சாங்கிற்கான ஷூட்டிங்கில் விஜய் இருந்தாராம். அவர் கூடவே இருக்கும் அந்த நபர் வெளியே நின்று கொண்டு இருந்தாராம். அப்போது பிர்லா போஸ் எப்போதும் போல அந்த நபரை பார்த்ததும் தன்னுடைய வணக்கத்தை சொல்லி இருக்கிறார்.
இந்த நடிகரை ஞாபகம் இருக்கா? சிவாஜிக்காக தற்கொலை செய்ய நினைத்தவரின் தற்போதைய நிலை தெரியுமா?
ஆனால் அந்த நபரோ வாய்ப்பு வேணும்னா இங்க ஏன் வர. போய் ப்ரொடியூசரை பார்க்க வேண்டியது தானே என்று அலட்சியமாக சொல்லி இருக்கிறார். இதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்ததாம். நல்லா பழகியவரே இப்படி முகத்தில் அடித்தது மாதிரி சொல்கிறாரே என்று கஷ்டத்தில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் உதவியாளர்கள் இயக்குனர் அழைக்கிறார் என உள்ளே பிர்லா போஸை அழைத்து இருக்கின்றனர். அப்போது விஜய்யும் அந்த காட்சி முடித்துவிட்டு வரும் வழியில் பிர்லா போஸ் நிற்பதை பார்த்திருக்கிறார்.

அப்போது பிர்லா போஸிடம் ஏன் இங்கு நிற்கிறாய்? உள்ளே வந்து என் கூட உட்காரு என்று சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய்யுடன் இருந்த அந்த நபர் சொன்ன வார்த்தையால் கோபத்தில் இருந்த பிர்லா போஸ் விஜய் கூப்பிட்டு போக வில்லையாம். பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லையாம். விஜய்யை உதாசீனப்படுத்தி விட்டு நின்று இருக்கிறார்.
ஆனால் அதற்குப் பிறகு தான் செஞ்சது சிறுபிள்ளைத்தனம் என்று தெரியவந்தது. அதற்குப் பிறகு விஜய்யை பார்க்கவே இல்லை. ஒருவேளை இந்த பேட்டியை விஜய் பார்த்தால் என்னுடைய நிலைமையை புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் என்று அந்த பேட்டியில் பிர்லா போஸ் பேசி இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications