இந்த நடிகரை ஞாபகம் இருக்கா? சிவாஜிக்காக தற்கொலை செய்ய நினைத்தவரின் தற்போதைய நிலை தெரியுமா?
சென்னை: வெள்ளித்திரை, சின்னத்திரை என்று இரண்டிலும் நடித்த பிரபலமான கோவை அனுராதா பல நகைச்சுவை நாடகங்களை எழுதி, நடித்தும் இருக்கிறார்.

ஆனாலும் இவர் குழந்தையாக படிக்கும் பருவத்திலேயே எம்ஜிஆர், சிவாஜி மீது அதிகமான பாசம் வைத்திருக்கிறார். அவர்கள் இறந்த பிறகு நாம் வாழவே கூடாது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அந்த நேரத்தில் நினைத்திருந்தாராம்.
அது மட்டுமில்லாமல் இப்போது பல தொடர்களை இயக்கி வரும் இவர் தலைசிறந்த நாடக இயக்குனர், நகைச்சுவை நடிகர் என்ற பட்டம் பெற்றிருக்கும் நிலையில் இவர் பல நூல்களையும் எழுதி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
ஒரு சிலருக்கு தான் திறமைகள் ஒருங்கே அமைந்திருக்கும். அதை பலர் கண்டுகொள்ளாமல் போயிருக்கும் நிலையில் ஒரு சிலர் தனக்கு இருக்கும் திறமையை பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியே கொண்டு வந்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கோவை அனுராதா. இவர் சமீபத்தில் தன்னுடைய திரை பயணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

அதில் நான் 10 வயதில் இருக்கும்போது இருந்தே நடிக்கிறேன். அதனால என்னை சுற்றி எப்போதும் பசங்க கூட்டம் இருந்து கொண்டே இருப்பார்கள். நான் எந்த ஒரு படத்துக்கு போனாலும் அந்த படத்தை அப்படியே நடிச்சு காட்டுவேன். அப்போதெல்லாம் பாலும் பழமும், பாசமலர் என்று படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் பா வரிசையில் இருக்கும் படங்கள் என்றால் எனக்கு கொள்ளை இஷ்டம்.
எம்ஜிஆர், சிவாஜி இரண்டு பேருமே என்னுடைய உயிர் மாதிரிதான். அதுவும் அந்த நேரத்தில் எம்ஜிஆர் படங்கள் நல்ல விஷயங்களை சமுதாயத்திற்கு சொல்லிக் கொடுக்கும். அதையெல்லாம் பார்க்கும் போது நான் ஸ்கூல் படிக்கும்போதே சிவாஜி, எம்ஜிஆர் இறந்த பிறகு நாம உயிரோடு இருக்கக் கூடாது என்றெல்லாம் பேசி இருக்கிறேன். அந்த அளவிற்கு அவர்கள் மீதும் மரியாதை உண்டு.
அப்போதெல்லாம் இவர்களுக்குப் பிறகு சினிமாவே இருக்காது என்றெல்லாம் நினைத்திருந்தேன். அப்போதுதான் பாலச்சந்தர் சாரோட நாடகம் பார்த்து எனக்கு நாடகம் போட ஆசை வந்தது. 1965 ஆம் ஆண்டில் எழுத்தாளர் ஏகாம்பரம் என்ற ஒரு நாடகம் போட்டேன். அந்த நாடகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு கோயம்புத்தூரில் நண்பர்கள் கலைப்பண்பாட்டு குழு என்று என்னோட சில நண்பர்களோடு ஆரம்பித்தேன்.

அதுவும் நல்லாவே போய்க்கொண்டிருந்தது. அப்போது எல்லா பத்திரிகைகளும் எங்களுடைய நாடகக் குழு பற்றி எழுதுவார்கள். அப்போ என் தம்பிகள் நடிக்க ஆர்வமா இருந்தாங்க. நான் எழுதுவதற்கு ஆர்வமா இருந்தேன். அப்படியே எங்களுடைய பாதை அமைந்துவிட்டது. என்னுடைய நாடகத்தில் ஆபாசமோ, பெண்களை மட்டமாகவோ எழுத மாட்டேன்.
நகைச்சுவை தான் அதிகமாக இருக்கும். நான் எம்ஜிஆர் சார் உடைய வழியை பின்பற்றி வந்தேன். அப்போது தான் எனக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது அப்படியே பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருக்கிறேன். இப்போது வரைக்கும் நான் என்னோடு நடித்தவர்களோடு தொடர்பில் தான் இருக்கிறேன்.
இப்போது மாதத்திற்கு ஒரு நாள் நாடகங்கள் என்று பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று இவர் மகிழ்ச்சியோடு தன்னுடைய சினிமா வாழ்க்கையும் மற்றும் தன்னுடைய சிறுவயது நினைவுகள் பற்றி பேசி இருக்கிறார். அதை பார்த்து அதிகமான ரசிகர்கள் இவரை நாங்கள் பல நாடகத்தில் பார்த்திருக்கிறோம். இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருக்கும் என்று பாராட்டி வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications