கண் முன்பு இடிந்து விழுந்த வீடு.. இரவில் நடந்த கொடுமை.. இன்னும் அந்த ஏக்கம்.. போஸ் வெங்கட் எமோஷனல்
சென்னை: மெட்டி ஒலி சீரியலில் போஸ் கேரக்டரில் நடித்து பிரபலமான போஸ் வெங்கட் தன்னுடைய வீடு தன் கண்முன்னே இடிந்து விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எத்தனையோ சீரியல்கள் புதியது புதியதாக நாளுக்கு நாள் அறிமுகம் ஆகி கொண்டு இருந்தாலும் ஒரு சில சீரியல்கள் பல வருடங்களை கடந்தாலும் ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை கொண்டு வந்து விடும். அந்த மாதிரி ஒரு சீரியல் தான் மெட்டிஒலி இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் அதே கேரக்டராக பிரபலம் அடைந்

தனர். அந்த மாதிரி தான் போஸ் வெங்கட் ஒருவர். இவருடைய நிஜப்பெயர் வெங்கடேசன் தான் தான் எப்படியாவது சினிமாவில் நடிகராக ஆகிவிட வேண்டும் என்று 17 வயதில் சென்னைக்கு வந்திருக்கிறார். போஸ் வெங்கட் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு இந்த சீரியல் மூலமாகத்தான் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த நிலையில் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த கன்னி மாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார். அந்த திரைப்படத்தில் கதையானது போஸ் வெங்கட் ஆரம்ப காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தபோது அவருடைய வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட சம்பவங்கள் பற்றி தான் இருந்தது.
அதைத்தொடர்ந்து போஸ் வெங்கட் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் நாங்கள் ஆரம்பத்தில் பெரிய ஒரு வீட்டில் தான் வசித்து வந்தோம். ஒரு நாள் அந்த வீட்டில் நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது அப்பா திடீரென்று எங்களை எழுப்பி கொண்டு இருந்தார். என்னை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். வெளியே எட்டி பார்க்கும்போது அங்கு மாட்டு வண்டி பூட்டப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் வண்டியில் ஏற்றப்பட்டு இருந்தது.
எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அப்போது இனிமே இந்த வீட்டில் நாம் இருக்க மாட்டோம் என்று சொல்லி அப்பா கூப்பிட்டு போனார் எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஆச்சு இதுதானே நம்ம வீடு எங்க போறோம் எங்க போறோம் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். இரவு 12 மணி வாக்கில் அந்த சம்பவம் நடந்தது. அதற்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது அப்பா கடன் பிரச்சனை காரணமாக அந்த வீட்டை விற்று விட்டார் என்று சொன்னாங்க.

அதற்குப் பிறகு தான் ரெண்டு வருஷம் கழிச்சு நாங்க வேற ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சோம். அப்பா உயிரோடு இருக்கும்போதே ஒரு வீடு கட்டி விட வேண்டும் என்று நினைத்து அந்த வீடு கட்டினோம். அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து நாங்கள் முதலில் இருந்த வீட்டை எங்க கண்ணு முன்னாடியே இடித்து நொறுக்கிட்டாங்க. அந்த வீட்டில் எனக்கு நிறைய ஞாபகம் இருக்கு. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தான் அந்த பழைய வீட்டை அப்பா விற்றது.
வீட்டை விட்டு வெளியே வந்து புது வீடு கட்டி இருந்தாலும் பழைய வீடு ஞாபகங்கள் இப்போதும் என்னுடைய கனவில் வரும். அதனாலேயே என்னுடைய அண்ணனிடம் சொல்லி இருக்கிறேன் அந்தப் பழைய இடம் விலைக்கு வந்தால் உன்னிடம் பணம் இருந்தால் நீ வாங்கி விடு. இல்லை என்றால் என்னிடம் பணம் இருந்தால் நான் வாங்கி விடுவேன் என்று சொல்லி இருக்கிறோம். அந்த இடம் விலைக்கி வந்தால் எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று எனக்கு ஒரு பெரிய கனவு இருக்கிறது என்று அந்த பேட்டியில் போஸ் வெங்கட் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications