நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி.. மணமகள் இந்த பிரபலமா?
சென்னை: நடிகர் சார்லியின் மகன் திருமணத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதோடு நடிகர் சார்லி மகன் திருமணத்தில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்று காலையில் இருந்தே பல பிரபலங்களின் வீட்டு திருமண புகைப்படங்கள் மற்றும் செய்திகள் தான் இணையத்தில் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறது. ஏற்கனவே நடிகர் அர்ஜுன் மகள் திருமணம் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது நடிகர் சார்லியின் மகன் திருமண புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஜூன் மாதம் தொடங்கியதுதான் தொடங்கியது ஒரு பக்கம் ஸ்கூல் திறந்து விட்டது என்று பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விடும் நேரத்தில் மறுபக்கத்தில் திருமண சுபக்காரியங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. ஒரே நேரத்தில் பலர் வீட்டில் பங்க்ஷன் கொண்டாடப்படுவதால் மக்கள் எங்கு போவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் பல பிரபலங்களும் தங்களுடைய வீட்டில் அடுத்தடுத்து பங்ஷன்களை வைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சார்லின் குடும்பமும் இடம் பிடித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வரும் நடிகர் சார்லி குணசித்திர நடிகராகவும் பிரபலம் அடைந்திருக்கிறார். இவர் அதிகமாக படித்திருந்தாலும் அரசு வேலையை உதறித் தள்ளிவிட்டு நடிகனாகத்தான் ஆகுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். 1983 ஆம் ஆண்டு பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான சார்லி காமெடியான கேரக்டரிலும், துணை நடிகராகவும் கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அதிலும் இவர் நடித்த பிரண்ட்ஸ் திரைப்பட காமெடி அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. அதுபோல விஜயுடன் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அஜித்துடன் அமர்க்களம் என்று பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் "வெற்றி கொடி கட்டு" திரைப்படத்தில் இவருடைய நடிப்பு இப்போதும் பலரையும் கண்கலங்க வைத்து விடும்.
இந்த நிலையில் சார்லியின் மகன் அஜய் தங்கசாமி பெர்மிசியாடெமி ஆகிய இருவருக்கும் நேற்றைய தினம் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. இன்று அவர்களுடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதில் ரிசப்ஷனில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களோடு முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications