Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு வாடகை கொடுக்கலை.. வண்டி டியூவும் கட்டலை.. இனி நான் ரிவ்யூ கொடுக்கலை.. தேம்பி அழுத கூல் சுரேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாடகை கொடுக்க முடியாமல் நான் கஷ்டப்படுறேன், வண்டிக்கு டியூ கட்ட முடியவில்லை என நடிகர் கூல் சுரேஷ் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தமிழில் குணசித்திர வேடங்களிலும் கல்லூரி மாணவனாகவும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் கூல் சுரேஷ். இவர் சிம்புவின் தீவிர ரசிகர். குறிப்பாக சிம்புவின் படங்கள் வெளியாகும் அன்றைய தினம் முதல் காட்சியை பார்வையிட்டு விமர்சனத்தையும் சொல்வார் சுரேஷ். இதைத் தொடர்ந்து சிம்பு நடிக்காத படங்களுக்கும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

இவர் தியேட்டருக்கு வரும் போதெல்லாம் சிம்பு ரசிகர்களும் இவரது ரசிகர்களும் அங்கு கூடி ஒரே கலகலப்பாக இருக்கும். அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற சிம்புவின் படத்தை கடந்த சில மாதங்களாக கூல் சுரேஷ் பிரமோட் செய்து வந்தார்.

வணக்கம்

வணக்கம்

வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு ஒரு வணக்கத்தை போடு என கூறி அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹைப்பை உருவாக்கினார். அது போல் எந்த படமாக இருந்தாலும் விமர்சனம் செய்யும் போது வெந்து தணிந்தது காடு என சொல்லியே ஆரம்பிப்பார். அண்ணாச்சி நடித்த லெஜண்ட் படத்திற்கும் விமர்சனம் சொல்லும் போது வெந்து தணிந்தது காடு, அண்ணாச்சி ஒரு வணக்கத்த போடு என்றார்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு

சிம்புவின் வெந்து தணிந்தது காடு

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம் தியேட்டரில் வெளியானது. இந்த படத்தின் முதல் காட்சியைப் பார்க்க கூல் சுரேஷ் தனது காரில் தியேட்டருக்கு சென்றார். அப்போது ரசிகர்கள் கூல் சுரேஷை பார்ப்பதற்காக முண்டியடித்த போது கார் மீது விழுந்ததால் கார் கண்ணாடி உடைந்தது.

கார் உடைப்பா

கார் உடைப்பா

எதேச்சையாக நடந்த இந்த சம்பவத்தை சில செய்தி நிறுவனங்கள், வெந்து தணிந்தது காடு படம் நன்றாக இல்லாததால் ரசிகர்கள் கூல் சுரேஷின் காரை உடைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதில் நிறைய பேர் கமென்ட் போட்டிருந்தார்கள். காரை மட்டும்தான் உடைத்தீர்களா கூல் சுரேஷ் மூஞ்சி மொகரையை எப்போது உடைப்பீர்கள் என கேட்டிருந்தனராம்.

கூல் சுரேஷ் கண்ணீர்

கூல் சுரேஷ் கண்ணீர்

இதனால் மனம் உடைந்த கூல் சுரேஷ் கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் என் காரை ரசிகர்கள் உடைக்கவில்லை. அவர்கள் என்னை ஆசையாக பார்க்க வரும் போது கார் கண்ணாடி உடைந்துவிட்டது. இதற்கு போய் கூல் சுரேஷை அடிச்சிட்டாங்கன்னு சொல்றீங்களே நான் என்னய்யா துரோகம் செய்தேன். உங்கள் வீட்டில் திருடினேனா, உங்க வீட்டு பொண்ணை கையை பிடித்து இழுத்தேனா என்ன செய்தேன்?

பணம் கொடுக்க போகிறேன்

பணம் கொடுக்க போகிறேன்

அப்படியே காரை உடைத்திருந்தாலும் நான்தான்யா பணம் கொடுத்து சரி செய்ய போறேன். உங்களுக்கு என்ன இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா, உங்கள் அப்பா, அம்மா வாங்கிக் கொடுத்ததா? பேரையும் புகழையும் வாங்க நான் எத்தனை கஷ்டப்படுறேன் தெரியுமா? இனி நான் ரிவ்யூ கொடுக்கக் கூடாதுனு சொல்றீங்களா சரி விட்டுடறேன்.

நண்பேன்டா

நண்பேன்டா

என் நண்பன் சந்தானமும் சிம்புவும் எனக்கு சோறு போடுவாங்கய்யா. நான் இந்த ரிவ்யூ கொடுக்க காசெல்லாம் வாங்குவதில்லை. சிம்பு மீதான பிரியத்தில் அப்படி செய்கிறேன். இப்போது படமும் வந்துவிட்டது. இனி நான் ரிவ்யூ கொடுக்கலை போதுமா? வீட்டு வாடகை கொடுக்க முடியாம, கார் டியூ கட்ட முடியாம நான் எவ்வளவு கஷ்டப்படுறேன் தெரியுமா என கண்ணீர் சிந்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+