எனக்கு குழந்தை இல்லை.. மோசமா நடத்துறாங்க..வைஷ்ணவி இறப்புக்கு நான் காரணமா? நடிகர் தேவ் ஆனந்த் எமோஷனல்
சென்னை: சீரியல் நடிகர் தேவ் ஆனந்த் தன்னை பற்றி வந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் நடிகை வைஷ்ணவி தேவ் ஆனந்தால் தான் இறந்து போனார் என்று அவருக்கு தண்டனை கிடைத்திருந்த நிலையில் அது குறித்து தேவி ஆனந்த் பேசியிருக்கிறார்.

அதோடு தனக்கு குழந்தை இல்லாமல் தான் பட்ட வேதனை குறித்தும் சினிமா துறையில் நடக்கும் கஷ்டங்கள் குறித்தும் தேவ் ஆனந்த் பேசி இருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர் தேவ் ஆனந்த் சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய இத்தனை வருட திரை வாழ்க்கை குறித்தும் தன்னுடைய குடும்பத்தை குறித்தும் கூறி இருக்கிறார். அதில் தனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் நடந்தது என்றும் தங்களுக்கு இப்ப வரைக்கும் குழந்தை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இவருடைய தம்பியின் மகனை தான் இவர் வளர்த்து வருகிறாராம். இவருடைய தம்பியின் மகன் இவரை அப்பா என்று தான் அழைப்பாராம். எப்போதும் இவரோடு அதிகமாக பாசமாக இருப்பாராம். அதோடு இந்த நடிப்பு வாழ்க்கையில் பல வேதனைகளை தான் அனுபவித்து இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார் ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு அதிகமாக கோபம் வரும் அதனாலே என்னுடைய வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
இப்போது நடப்பது எல்லாம் பார்க்கும் போது இவ்வளவு தானா என்று தோன்றுகிறது. ஆனால் முன்னாடி அப்படி எனக்கு தோணாது இப்ப வர்ற நடிகர்கள் பலரும் யாரையும் மதிக்கிறது இல்லை. அது வேதனையாக இருக்கிறது. நான் 25 வருஷமா நடிச்சுகிட்டு இருக்கிறேன். பலர் இப்ப வந்துகிட்டு நீங்க எல்லாம் ஒரு ஆளா என்கிற மாதிரி நடந்து கொள்கிறார்கள். அது பார்க்கும்போது கடுப்பாக இருக்கிறது. குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்திற்கு வர மாட்டேங்குகிறார்கள் என்று பல குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார்.
சித்தி சீரியல் என்னால் மறக்கவே முடியாது. அந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில மாதங்களாக எனக்கு வாய்ப்பு இல்லாமல் வாய்ப்புக்காக தேடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தாடி எல்லாம் வளர்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டேன். அப்போதுதான் சித்தி சீரியல் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். ஆனாலும் 2006 ஆம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் வைஷ்ணவியின் தற்கொலைக்கு சின்னத்திரையில் அவருடன் பணியாற்றிய தேவ் ஆனந்த் தான் காரணம் என்று வைஷ்ணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
அவர்கள் கொடுத்த புகாரின்படி வைஷ்ணவியை தேவ் ஆனந்த் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் வைஷ்ணவி அதை நிராகரித்து விட்டார். இதனால் ஆத்திரம் பண்ண தேவ் ஆனந்த் வைஷ்ணவியை தொடர்ந்து துன்புறுத்தினார். அதனால் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார் என்று அந்த கம்ப்ளைன்டில் கூறப்பட்டிருந்தது.
இதனால் தேவ் ஆனந்த் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 10,000 அபராதமும் விதித்திருந்ததாம். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவ் ஆனந்த் மேல்முறையீடு செய்திருந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் தேவ் ஆனந்திற்கு மகளிர் நீதிமன்றம் விதித்த ஐந்தாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்து இருந்தது.

இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்திருந்தது. இந்த நிலையில் இப்போது இது பற்றி தேவ ஆனந்த் பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் என்ன நடந்தது என்று எனக்கும் வைஷ்ணவிக்கும்தான் தெரியும். சாட்சி சொல்ல வேண்டியவா இப்போ உயிரோடு இல்லை. நான் சொன்னால் மட்டும் நம்ப போறாங்களா? என்ன நடந்தது என்று தெரியாமல் கமெண்ட் போடுவதற்கு யாருக்கும் அருகதையும் இல்லை, உரிமையும் தகுதியும் கிடையாது.
எங்க இருவருக்கும் மட்டும்தான் என்ன நடந்தது என்று தெரியும். அதை சொல்ல இப்போ அவ உயிரோடு இல்ல, நான் சொன்னால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாது. அவன் பொய் சொல்கிறான் என்று சொல்வார்கள். இந்த உலகத்தில் வாழ்பவர்கள் பொய் சொல்வதை தான் ஏற்றுக்கொள்கிறார்களே தவிர உண்மை சொன்னால் யாரும் காது கொடுத்து கேட்பதில்லை என்று எமோஷனலாக அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications