நடிகர் துருவ் விக்ரம் போட்ட பதிவு.. இதுதான் சர்ச்சைக்கு பதிலடியா? அதிக ஷேர் ஆகும் ஸ்டோரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் கொடுத்த பேட்டி இப்போது சினிமா வட்டத்தில் பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. தனது கடந்த கால காதல் உறவு குறித்து வெளிப்படையாக பேசிய அனுபமா, அந்த உறவில் தான் சந்தித்ததாக கூறும் "Narcissist Abuse " மன அழுத்தம், கட்டுப்பாடுகள், தன்னை இழந்தது போன்ற பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் முன்னால் காதலரின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் ரசிகர்கள் அந்த பேச்சை நடிகர் துருவ் விக்ரமுடன் இணைத்து சோசியல் மீடியாவில் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். சமீபத்தில் துருவ் வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.

அனுபமா சமீபத்தில் பேசும்போது, தனது முன்னாள் காதலன் ஒருநாள் ரேமோ மாதிரி இருப்பார், மறுநாள் அன்னியன் மாதிரி விடுவார், பிறகு அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல வந்து மன்னிப்பு கேட்பார் என்று கூறி இருந்தார். ஏற்கனவே துருவ் விக்ரம் மற்றும் அனுபமா இருவரும் இணைந்து பைசன் படத்தில் நடித்த போது காதலித்ததாக பல செய்திகள் பரவி வந்தது.

Dhruv Vikram Anupama

நடிகை அனுபமா குற்றச்சாட்டு

அப்போது இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக அனுபமா போஸ்ட்க்கு துருவ் விக்ரம் லைக் போடுவது, துருவ் போஸ்ட்க்கு அனுபமா ஹார்டின் பறக்க விடுவது என சோசியல் மீடியாவில் தங்களுடைய காதலை மறைமுகமாகவே உறுதிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னைத்தானே மீண்டும் தேடிக் கொண்டதாகவும், கடந்த கால கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்து விட்டேன் என்று கூறியிருந்தார்

அந்நியன் மாதிரி பண்ணுனாரு! 2 வருட வலி.. பிரேக்கப் பற்றி முதல் முறையாக அனுபமா பரமேஸ்வரன் ஓபன்
இதனால் துருவ் மற்றும் அனுபமா இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது. இந்த நிலையில் தான் மலையாள சேனல் ஒன்றில் அனுபமா பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆனது. அதற்குப் பிறகு பலரும் துருவ் பற்றி தான் அனுபமா எவ்வளவு குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறார் ஆனால் துருவ் என்ன பதில் தான் சொல்லப்போகிறார் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர்.

Dhruv Vikram Anupama

துருவ் விக்ரம் இன்ஸ்டா ஸ்டோரி

இந்த நிலையில் தான் துருவ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது. அதில் அவர் கடற்கரையில் வேகமாக ஓடிக் கொண்டிருப்பது போலவும், பிறகு கடல் அலைகளுக்குள் கோபமாக, விரத்தியோடு நடப்பது போலவும் காட்சிகள் இருக்கிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் துருவ் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? அதனால் தான் இது போன்று ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறாரா? என்று கேள்வி எழுந்து வருகிறது.

ஏற்கனவே விக்ரம் ஒரு குரங்குடன் கொஞ்சி விளையாடி வீடியோ வெளியிட்டது பெரியதாக பேசப்பட்டு வருகிறது. அது குறித்த விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு இடையில் இப்போது துருவ பற்றிய சர்ச்சையும் கிளம்பி கொண்டிருக்கிறது. இதனால் மொத்த வதந்திகளுக்கும் விக்ரம் குடும்பத்தினர் என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+