நடிகர் தினேஷ் கார்த்திக்கு ஒரே நேரத்தில் வந்த "பிரச்சனை".. இனி இறுதி முடிவு இதுதானாம்
சென்னை: சீரியல் நடிகர் தினேஷ் கார்த்திக் மீது அவருடைய மனைவி சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி நேற்று போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.
அதே நேரத்தில் தினேஷ் மீது இன்னொரு போலீஸ் ஸ்டேஷனில் ரச்சிதாவிற்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் பிரபலமும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தாராம்.
இந்த நிலையில் இனி தன்னால் ரச்சிதாவோடு வாழ முடியாது என்று தினேஷ் கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
சமீப காலமாகவே காதலித்து திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் பிரச்சனை பெரிய அளவில் பூகம்பமாக வெடித்தது.

அதைத்தொடர்ந்து சில மாதங்கள் அமைதியாக இருந்த அவர்களுடைய பிரச்சனை இப்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுபோல சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் பிரச்சனையும் கடந்த ஒரு மாதமாகவே இணையத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரச்சிதாவிற்கும் சீரியல் நடிகர் தினேஷ் கார்த்திக்கும் இருக்கும் குடும்ப பிரச்சனை இப்போது வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதும் அதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததும் அனைவருக்கும் தெரிந்தது தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அது குறித்து ரச்சிதா மறைமுகமாக தெரிவித்து இருந்தார்.
அதே நேரத்தில் வெளியே இருந்த தினேஷ் கார்த்திக் ரச்சிதாவிற்கு அதிகமான ஆதரவு கொடுத்து தங்களுக்குள் பிரச்சனை இருப்பதை உறுதிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் இவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்திருக்கிறது.
இந்த நிலையில் தனக்கும் ரச்சிதாவிற்கும் இடையில் பிரச்சனை உண்டாவதற்கு காரணமாக ரச்சிதாவிற்கு குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஜிஜிக்கு பங்கு இருக்கும் என்று சந்தேகப்படுவதாக தினேஷ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினேஷ் மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜிஜி புகார் புகார் அளித்திருந்தாராம்.
இந்த நிலையில் நேற்று இந்த புகாருக்காக தினேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் கணவர் மீது ரச்சிதாவும் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த புகாருக்கான விசாரணைக்கு நேற்று மாலை தான் இருவரும் மாங்காடு காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் தினேஷ் மீது ரச்சிதா சில காரணங்களை சொல்லி அதற்காக அவரை பிரிய முடிவெடுப்பதாகவும் கூறியிருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்ட முதல் காரணம் தன்னுடைய பெற்றோரை தினேஷ் மதிப்பதில்லை என்பதுதானாம். அந்த குற்ற சாட்டிற்கு தினேஷ் பதில் அளிக்கையில், இவங்களை நான் பிரிந்து இருந்தபோது கூட இவங்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்களில் ரச்சிதாவின் அம்மாவும் அப்பாவும் என்கிட்ட பேசிட்டு தான் இருந்தாங்க. இந்த நிமிடம் வரை அவங்களுக்குள் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. வேணும்னா இப்ப கூட நீங்க அவங்கள கூப்பிட்டு கேட்கலாம் என்று போலீஸிடம் தெரிவித்து இருந்தாராம்.
இதுபோல ரச்சிதா இரண்டாவதாக சொன்ன காரணம், தினேஷ் எப்போதும் பணம் பணம் என்று நச்சரிப்பார் என்பதுதானாம். இந்த புகாருக்கு தினேஷ் பதிலளிக்கையில் நாங்க கணவன் மனைவியாக இருந்தோம். டிவியில் எல்லோருக்கும் எப்பவும் வாய்ப்பு அமையாது. எனக்கு வாய்ப்பு இல்லாத நாள்களில் வாடகை, இஎம்ஐ கட்ட இவங்ககிட்ட காசு கேட்டு இருந்தேன். அதுவும் மனைவி என்கிற முறையில் தான் கேட்டேன் என்று கூறினாராம்.
இருவரையும் விசாரித்த போலீஸ் ரச்சிதா தொடர்புடைய விஷயத்தில் இனி தினேஷ் தலையிடக்கூடாது என்று சொன்னார்களாம். அத்தோடு இனி இவருடன் சேர்ந்து வாழ சாத்தியமில்லை என்று சொன்ன ரச்சிதாவிடம் அப்படி விருப்பம் இல்லாவிட்டால் சட்ட பூர்வமாக பிரிந்து கொள்ளுமாறும் கூறி, இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அனுப்பி இருக்கிறார்களாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications