சூட்டிங் போன கிராமத்தில் ரசம் கேட்ட மயில்சாமி.. கலங்க வைத்த பெண்.. 70 ஆயிரமா? யாருக்கும் தெரியாத கதை
சென்னை: நடிகர் மயில்சாமி கடந்த வருடத்தில் காலமாகி இருந்தாலும் அவருடைய புகழ் எப்போதும் பலரால் பேசப்பட்டு வருகிறது. பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் மயில்சாமி தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து பலருக்கு உதவி செய்து இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கணேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
காமெடி நடிகராகவும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்திருந்த நடிகர் மயில்சாமி கடந்த வருடத்தில் கோயிலுக்கு போயிட்டு வீட்டிற்கு வந்திருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட அதனால் மருத்துவமனைக்கு போயிருந்த நிலையிலே அங்கே அவர் காலமாகி இருந்தார். இது பெரிய அளவில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.

பொதுவாக நடிகர் எம் ஜி ஆர் படங்களை பார்த்து சினிமாவிற்கு வந்த நடிகர்கள் ஏராளம். அதை அவர்கள் பல மேடைகளில் சொல்வதை நாம் கேட்டிருப்போம். அந்த வகையில் நடிகர் எம்ஜிஆரை கடவுளாக பாவித்து நடிக்க வந்தவர் தான் நடிகர் மயில்சமி. அவர் எந்த இடங்களில் தனக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அங்கு எம்ஜிஆர் பாடல்களை பாடாமல் அவருடைய பேச்சு நிறைவு பெறாது.
அதுபோல மறைந்த மயில்சாமி செய்து வந்த உதவிகள் அவர் உயிரோடு இருக்கும்போது பலருக்கும் தெரிந்ததை விடவும் அவர் காலமான பிறகு தான் பலருக்கும் தெரிந்தது. ஆரம்பத்திலிருந்து தன்னால் முடிந்த அளவிற்கு சின்ன சின்ன உதவிகளையும் மயில்சாமி செய்து வந்ததால்தான் அவர்கள் வாழ்ந்து வந்த பகுதி மக்கள் கூட அவர் மறைந்த அன்று பெரிய அளவில் வருத்தங்களை தெரிவித்து கண்ணீரோடு காட்சி அளித்தனர்.
அதுபோல மயில்சாமி பற்றிய ஒரு சம்பவத்தை நடிகர் கணேஷ் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதாவது எல்லோரும் மயில்சாமியோடு ஒரு படத்தின் சூட்டிங்கிற்க்கு கிராமத்துக்கு போயிருந்தார்களாம். அப்போது பட சூட்டிங் போது உணவு மதிய உணவு புரொடக்ஷனில் இருந்து தான் வருமாம். ஆனால் அது வெளியூர் படப்பிடிப்பு என்பதால் அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று மயில்சாமி அங்கிருந்து பெண்களிடம் அக்கா கறிக்குழம்பு, மீன் குழம்பு வச்சிதாங்க அக்கா என்று கேட்டிருக்கிறார்.
அப்போது மயில்சாமி பார்த்ததும் அங்கிருந்த பெண்களும் பாசமாக அவருக்காக சமைத்து கொடுத்து இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ரசம் மட்டும் மிஸ் ஆகிவிட்டதாம். உடனே மயில்சாமி இன்னொரு பெண்மணியை அழைத்து அக்கா ஒரு 20 பேருக்கு ரசம் வச்சு கொடு என்று உரிமையோடு கேட்டு இருக்கிறார். அந்த பெண்ணும் உடனே வச்சு கொடுத்திருக்கிறது.
பிறகு சாப்பிட்டு முடித்ததும் கறி குழம்பு வச்ச பெண்ணுக்கு 2000 ரூபாயும் மீன் குழம்பு வச்ச பெண்ணுக்கு 2000 ரூபாயும் மயில்சாமி கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ரசம் வச்ச பெண்ணை அனைத்து அக்கா இந்தா அக்கா 2000 ரூபாய் என்று சொல்லிக் கொடுக்க அதற்கு அந்த பெண்மணி அக்கான்னு சொல்லிட்டு இப்படி பணத்தை தந்து என்னை கஷ்டப்படுத்துறியேப்பா என்று கேட்டு அந்த ரூபாயை வாங்க மறுத்து விட்டாராம்.
அதை பார்த்து எல்லோரும் மெய் சிலிர்த்து போயிருக்கிறார். பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த பொண்ணு தன் வீட்டின் நிலைமையை பேசி இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் தனக்கு 70 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் அதை என்னுடைய மகன் வளர்ந்துதான் அடைப்பான் என்றும் பேசி இருக்கிறார்.
உடனே மயில்சாமி தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் ப்ரொடக்ஷன் மேனேஜரை அழைத்து நான் நான்கு நாட்கள் நடித்துக் கொடுத்திருக்கிறேன் அதற்கான சம்பளம் 70 ஆயிரத்தை கொடு இல்லனா நான் மேக்கப் போட மாட்டேன் என்று மிரட்டி இருக்கிறார். அதற்கு மேனேஜர் ஐம்பதாயிரம் தான் இருக்கு என்று கொடுக்க மேலும் தன்னிடம் இருந்த இருபதாயிரம் ரூபா பணத்தையும் வங்கிகளில் இருந்து எடுத்து 70 ஆயிரத்து அந்த பெண்ணுக்கு கொடுத்து கடனை அடைக்க சொல்லி இருக்கிறார்.
அந்த வகையில் மயில்சாமி தன்னிடம் உதவி என்று கேட்டபோது உடனே செய்வதற்கு பெரிய அளவில் கோடீஸ்வரனாக இல்லை என்றாலும் அடிப்படையில் ஒரு நல்ல மனிதர் கோடி கோடியாக சம்பளம் வாங்கி குவிக்கும் எந்த நடிகருக்காவது இப்படி ஒரு மனம் வருமா என்று அந்த பேட்டியில் நடிகர் கணேஷ் பேசியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications