Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் கவுண்டமணியின் மனைவி மரணம்.. வருத்தத்தில் திரையுலகினர்.. வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67 வயது) உடல்நிலை குறைவு காரணமாக இன்று (மே 5ஆம் தேதி) காலை 10:30 மணி அளவில் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Goundamani

தமிழ் சினிமாவில் காமெடி கிங் என்று பலராலும் கொண்டாடப்படும் நடிகர் கவுண்டமணி 80ஸ் கால கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் 90ஸ் காலகட்டத்திலும் அதிகமான திரைப்படங்களில் பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார். அந்த காலத்தில் செந்தில் மற்றும் கவுண்டமணியின் காமெடிக்காகவே பல திரைப்படங்கள் ஹிட் ஆகி இருக்கிறது. எத்தனையோ நடிகர்கள் அதற்குப் பிறகு காமெடியனாக வந்தாலும் இப்போதும் செந்தில் கவுண்டமணி காமெடி பலருடைய ஃபேவரிட் ஆக இருக்கிறது.

சினிமாவில் அறிமுகம்

ஒரு கட்டத்தில் ஒரு திரைப்படம் உருவாக்க போகும்போதே முதலில் செந்தில் மற்றும் கவுண்டமணி கால்ஷிட் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் கதாநாயகர்களிடமே கால்ஷீட் பேசியதாக பல இயக்குனர்கள் பேசியிருக்கிறார்கள். 1970 ஆம் ஆண்டு வெளியான ராமன் எந்தன் ராமனடி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கவுண்டமணி சினிமாவில் நுழைந்திருந்தார்.

வாழ்க்கையில் திருப்பம்

1971 ஆம் ஆண்டு வெளியான தேனும் பாலும் என்ற திரைப்படத்தில் சுப்பிரமணி கேரக்டரில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். 1980ல் இருந்து தான் காமெடி நாயகனாக பலருக்கும் கவுண்டமணி பிரபலமாக தொடங்கி இருக்கிறார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் கவுண்டமணிக்கு பெரிய ஒரு திருப்பத்தை கொடுத்தது.

காதல் திருமணம்

அதற்குப் பிறகு பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் காதலர்களுக்கு உதவுவது போன்ற கேரக்டரில் கவுண்டமணி நடித்திருப்பார். அதேபோலத்தான் அவருடைய நிஜ வாழ்க்கையிலும் சாந்தி என்பவரை கவுண்டமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கவுண்டமணி மனைவி மறைவு

இந்த தம்பதிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சில நாட்களாகவே சாந்தி உடல்நிலை குறைவால் அவதியுற்று வந்த நிலையில் தன்னுடைய 67 வது வயதில் இன்று காலமானார். அவருடைய உடல் சென்னை தேனாம்பேட்டை இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

மாறாத கேரக்டர்

கவுண்டமணி பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் ஒத்த ஓட்டு முத்தையா என்று திரைப்படத்தில் நடித்திருந்தார். கவுண்டமணி மீண்டும் நடிக்க வேண்டும் என்று பலர் ஆசைப்பட்டாலும் அவரால் பழையபடி காமெடி கேரக்டரில் நடிக்க முடியுமா? என்பது பலரின் கேள்வியாகவும் இருக்கிறது. ஆனாலும் அவர் கலந்து கொண்ட பிரமோஷன் பேட்டிகளில் கூட கவுண்டமணி காமெடியாக தான் பேசிக் கொண்டிருந்தார்.

இரங்கல்

இவருக்கு வயதானாலும் அவருடைய கேரக்டர் மட்டும் மாறவில்லை என்று பலரும் கூறி வந்தனர். அதுபோல பல வருடங்களாக கவுண்டமணியின் நிலம் ஒன்று பிரச்சனையில் இருந்தது சமீபத்தில் தான் அந்த வழக்கில் கவுண்டமணியின் குடும்பத்தினருக்கு சார்பாக நீதி கிடைத்தது. தன்னுடைய குடும்பத்தை அதிகமாக வெளியே காட்டாமல் மறைத்து வைத்திருந்தார். இந்த நிலையில் கவுண்டமணியின் மனைவியின் மரணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+