மனைவி மறைவால் கலங்கி நிற்கும் கவுண்டமணி.. கண்கலங்க சத்யராஜ் சொன்ன வார்த்தை! நிழல்கள் ரவி வருத்தம்
சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நிலை குறைபாட்டால் இன்று மே 5ஆம் தேதி காலை காலமானார். திரைப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் போன்ற ஒரு சிலர் கவுண்டமணியின் மனைவிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.
நடிகர் கவுண்டமணி காமெடியனாகவும், கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் சத்தியராஜின் நெருங்கிய நண்பர். சத்யராஜ் பல பேட்டிகளில் தன்னுடைய நண்பர் கவுண்டமணி பற்றி பேசி இருக்கிறார். கவுண்டமணியின் கவுண்டர், எதார்த்தமான கேரக்டர் மற்ற நடிகர்களை விடவும் சத்யராஜுக்கு தான் அதிகமாக தெரியும். அதனாலயே இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர்.

கவுண்டமணி மனைவி மறைவு
இந்த நிலையில் இன்று கவுண்டமணியின் மனைவிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது கவுண்டமணி அண்ணனுக்கும் எனக்கும் இருக்கிற நட்பு பற்றி உங்களுக்கே தெரியும். மிகவும் நெருக்கமான நட்பு. நிறைய படங்களில் நான் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவருடைய மனைவி சாந்தி அக்கா இறப்பிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சத்யராஜ் இரங்கல்
கவுண்டமணி அண்ணனுக்கு அக்கா மீது அதிகமான பாசம் உண்டு. அவர் இன்று உடைந்து போய் இருக்கிறார். அவர் இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று எமோஷனலாக சத்யராஜ் பேசியிருந்தார். சத்யராஜை தொடர்ந்து நிழல்கள் ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது கவுண்டமணி அண்ணனின் மனைவி இறந்த துக்கத்தை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.
நிழல்கள் ரவி வருத்தம்
மிகவும் சோகமான ஒரு விஷயம். கவுண்டமணி அண்ணனை அவர்தான் முழுமையாக பார்த்துக் கொண்டார். எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து அண்ணனுக்கு செய்து உறுதுணையாக இருந்தார். கவுண்டமணி அண்ணனின் மனைவி சாந்திக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று தன்னுடைய இரங்கலை நிழல்கள் ரவி தெரிவித்து இருக்கிறார்.

மேனேஜர் பேசியது
அதுபோல கவுண்டமணியின் மேனேஜரும் பட தயாரிப்பாளருமான மதுரை செல்வம், கவுண்டமணி மற்றும் அவருடைய மனைவி குறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதில், கவுண்டமணி அவருடைய மனைவியின் இழப்பினால் மனம் கலங்கி போயிருக்கிறார். கணவன் மனைவி அந்நியோன்யம்னா அப்படி ஒரு அந்நியோன்யமாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் ரொம்பவும் பாசமாக பார்த்துக் கொள்வார்கள்.
காதல் மனைவி
சினிமாவின் ஆரம்ப காலத்திலேயே இவர்களுடைய திருமணம் நடந்தது. அதுவும் இவர்களுக்கு காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பிறகு பலருக்கு வாழ்க்கையில் ஏற்றம் வரும் அந்த மாதிரி தான் கவுண்டமணி சார் விசயத்திலும் உண்மையாக நடந்தது. கவுண்டமணி சார் வீட்டிற்கு வந்தாலே சாந்தி.. சாந்தி என்று கூப்பிட்ட படியே இருப்பார். கவுண்டமணி சார் பேமெண்ட் வாங்கினால் அப்படியே மனைவியிடம் கொடுத்து விடுவார். கவுண்டமணி சாரின் மனைவி சில காலமாகவே உடல் நலம் இல்லாமல் இருந்தார். அவருடைய மனைவியின் மறைவு அவருக்கு பெரிய இழப்பு என்று கவுண்டமணியின் மேனேஜரும் பட தயாரிப்பாளருமான மதுரை செல்வம் கூறி இருக்கிறார். அதுபோல நடிகர் செந்திலும் கவுண்டமணியின் வீட்டிற்கு நேரில் வந்து கவுண்டமணிக்கு ஆறுதல் சொல்லி விட்டு, அவருடைய மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications