விஜய் அப்படி சொன்னது வருத்தமா இருக்கு.. சிவகார்த்திகேயன் லேசுபட்டவர் இல்ல! ஹரிஷ் கல்யாண் ஓபன்
சென்னை: கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கி கொடுத்தது பற்றி பேட்டி ஒன்றில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதோடு விஜய் சொன்ன வார்த்தை தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஹரிஷ் கல்யாண் பேசியிருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாணுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது. அதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாமே அவருக்கு வெற்றி கிடைக்கிறது.

அதிலும் ஒரு சில திரைப்படங்கள் நடித்தால் கூட அந்த கதை மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் நடித்து வருகிறார். லப்பர் பந்து திரைப்படத்திற்கு முன்பு எம்எஸ் பாஸ்கர் உடன் பார்க்கிங் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படமும் பெரிய பெயர் வாங்கி கொடுத்தது.
இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் கலந்து கொண்ட போது அவரிடம் தளபதி விஜய் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கி கொடுத்தது சரியா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தன்னுடைய பதில் கொடுத்திருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், நான் விஜயின் தீவிரமான ரசிகன். நான் அவருடைய நிறைய படங்களை பார்த்து ரசித்து வருகிறேன். இப்போ அவர் அரசியலுக்கு போறாரு அது மிகப்பெரிய விஷயம். ஆனால் நடிக்க மாட்டேன் என்று அவர் சொன்னது ரொம்ப வருத்தம்.
கிரிக்கெட்டை விட்டு சச்சின் போகப்போறாருன்னு சொல்லும்போது ரொம்ப கவலையா இருந்தது. இப்ப இவ்வளவு நாளா விஜயை திரையில் பார்த்து பழகிய நிலையில் தளபதி இனி படம் நடிக்க மாட்டாரு என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.

அது எனக்கு மட்டுமல்ல அவருடைய ரசிகர்கள் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதோடு விஜய் சார் மற்றும் சிவா சார் இரண்டு பேருமே உழைக்காமல் இன்றைக்கு இருக்கிற இந்த நிலைமைக்கு வரவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு தான் வந்திருக்காங்க. சோ விஜய் சாருக்கு அதை யாரு கிட்ட கொடுக்கணும் என்று தோன்றுகிறதோ அதை அப்படித்தான் செய்வார். அதை ஏன் கொடுத்தார் என்று கேட்க முடியாது.
விஜய் சார் கொடுத்த துப்பாக்கி யாரு கிட்ட போகணும்னு இருக்கும் அங்கே சரியா போய் சேரும், இதில் என்னுடைய ஜட்ஜ்மெண்ட் எதுவும் இல்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு பல வருடங்களாக தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் என்னுடைய பார்வையில் சினிமா என்பது நிறைய போட்டி இருக்கு.
நீயா நானா அப்படிங்கறதது எப்போதுமே இருக்கு. ஆரம்பத்தில் ரஜினி- கமல், அஜித்- விஜய், சூர்யா- தனுஷ் அப்படின்னு வரிசையா போட்டி வந்துட்டே இருக்கிறது. என்னை பொறுத்த வரையில் எல்லோரும் முன்னேறுவதற்கான வழியைத்தான் பார்த்துக்கணும் என்று அந்த பேட்டியில் ஹரிஷ் கல்யாண் கூறியிருக்கிறார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications