ஜனகராஜ்க்கு என்ன ஆச்சு? டாப் நடிகராக இருந்தவரு.. காக்கி உடையில்! ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கிய காட்சி
சென்னை: காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பிரபலமடைந்த ஜனகராஜின் தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். காக்கி உடையில் வயதான தோற்றத்தில் பார்ப்பதற்கு பரிதாபமான நிலையில் ஜனகராஜ் தற்போது இருக்கிறார்.
அதைப் பார்த்ததும் பதறும் ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி மாறிவிட்டாரே என்று பீல் பண்ணி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் 70, 80களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் கனகராஜ் இப்போது அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இவர் முதல் முதலில் செய்தது நடிப்பிற்கு சம்பந்தமே இல்லாத வயலின் இசையை கற்றுக் கொண்டதுதான்.
வயலின் இசையை முறைப்படி கற்றுக் கொண்ட கனகராஜ் அதற்குப் பிறகு நடிப்பிற்காக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் அவருடைய முகத்தில் விபத்திற்குள்ளாகி முகவாதம் ஏற்பட்டு அந்த நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு அதற்கு கரண்ட் ஷாக் வைக்க வேண்டிய நிலைமைக்கு ஆளான நேரத்தில் பலர் இவரிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் முகம் தான் அழகு அதனால் உன்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று இவரிடம் அனுதாபமாக கேட்டிருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய குறையும் நிறையாக காட்டி தன்னுடைய தனித்துவம் காரணமாகவே கனகராஜ் பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதனாலையே புகழின் உச்சத்தில் பல முன்னணி நடிகர்களோடு இவர் நடிக்காத திரைப்படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த காலகட்டத்தில் இவர் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு இவர் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதனால் சமூக வலைத்தளத்தில் இவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்றும் அமெரிக்காவில் யாரும் இல்லாமல் தனியாக திரிந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் இவரைப் பற்றி தவறாக பல செய்திகள் பரவி வந்திருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து சில மாதங்களுக்கு முன்பு தனியார் youtube சேனலுக்கு ஜனகராஜ் பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர் நான் அமெரிக்கா எங்கே இருக்கிறது என்று கூட பார்த்தது கிடையாது. என்னுடைய மகனும் அமெரிக்காவில் கிடையாது. ஆனால் என்னை பற்றி தவறாக செய்திகள் பரவி வருகிறது. என்ன நடந்தது எங்கே இருக்கிறேன் என்பதை குறித்து யாருமே என்னிடம் கேட்கவில்லை.
நான் இதே சென்னையில் தான் இருக்கிறேன். சென்னையை விட்டு வேறு எங்கேயும் போகவில்லை. நல்ல திரைப்படங்கள் வந்தால் நடிக்கப் போவேன் என்று கூறியிருந்தார். இப்படியான நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு இப்போது இவர் காக்கி உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் இவருடைய முகம் மிகவும் வறுமையில் இருப்பது போன்று சோகமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில் இது நிஜத்தில் அவர் எங்கேயும் வேலை பார்க்கும் போது எடுத்த புகைப்படமா? அல்லது சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படமா? என்று உறுதியான எந்த தகவலும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 96 திரைப்படத்தில் நடிகர் ஜனகராஜ் பல வருடங்கள் கழித்து நடித்த அந்த திரைப்படத்தில் கூட வாட்ச்மேனாக நடித்திருந்தார்.
அதுபோல இப்பொழுது டிரைவராகவோ அல்லது கண்டக்டர் ஆகவோ கூட நடிக்கிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதே நேரத்தில் இவர் காமெடி ரசிகர்களை குபீர் என்று சிரிக்க வைத்து விடும். ஆனால் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்பதும் ரசிகர்களின் வருத்தமாகவும் இருக்கிறது.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications