அந்த ஒரு பாடல் ஷோ.. கலந்து கொண்ட பிரபலங்கள் வரிசையாக விவாகரத்து! ஜெயம் ரவி லேட்டஸ்ட்!
சென்னை: பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து கொள்வது குறித்து இணையத்தில் ரசிகர்கள் பல்வேறு யூகங்களை பரப்பி வருகிறார்கள்.
ஜாலியான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் விவாகரத்து செய்வதும் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சமீபத்தில் சினிமா ரசிகர்களை சில செய்திகள் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அதாவது தாங்கள் பார்த்து பாராட்டிய நடிகர்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து கொள்வது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து ஜீவி பிரகாஷ் தன்னுடைய மனைவியான சைந்தவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். நேற்று ஜெயம் ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை தான் விவாகரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இதையடுத்து இணையத்தில் ரசிகர்கள் புது தகவல் ஒன்றை பரப்பி வருகிறார்கள். அதாவது சமீபத்தில் சைந்தவி, டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட சில வாரங்களிலேயே தன்னுடைய விவாகரத்து செய்தியை அறிவித்திருந்தார்.
அதே நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பான அடுத்த நாளில் ஜெயம் ரவியும் தன்னுடைய விவாகரத்து செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் இதுபற்றி கலாய்த்து வருகிறார்கள்.

மேலே குறிப்பிட்டது போல ஒரு பெண் நடத்தும் ஜாலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்கள் அடுத்தடுத்து யதேச்சையாக மரணம் அடைந்திருக்கிறார்கள். நடிகர் மாரிமுத்து, நடிகர் மனோபாலா, ஆர் எஸ் சிவாஜி போன்றவர்கள் அந்த நிகழ்ச்சிகளில் கடைசியாக கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்போது பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் விவாகரத்து வருகிறதா? என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உடனையே விவாகரத்து செய்ய வேண்டும் என்று அந்த பிரபலங்கள் முடிவு எடுக்கவில்லை. பல மாதங்களாக அவர்களுக்குள் பல பிரச்சனைகள் இருந்த நிலையில் தான் சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் கலந்து ஆலோசித்து அவர்களுடைய குடும்பத்தினராலும் தீர்க்க முடியாத நிலை வந்த பிறகுதான் அவர்கள் விவாகரத்து செய்தியை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இணையத்தில் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதால் விவாகரத்து செய்கிறார்களா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
அதுபோல சில தொலைக்காட்சியில் சில பிரபலங்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த பிரபலங்கள் குறைந்த பட்சம் ஒரு வருடம் கூட திருமண வாழ்க்கையில் இணையவில்லை. அதுவும் விவாகரத்து முடிவுகளுக்கு வந்துவிட்டது, இதுவும் சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக தொகுப்பாளினி டிடி தன்னுடைய காதலை வெளிப்படையாக தொலைக்காட்சியில் அறிவித்ததும் அவருக்கும் அவருடைய காதலனுக்கும் எங்கேஜ்மென்ட் செய்து வைத்திருந்தார்கள். அதுவும் பிரிந்து போய்விட்டது.

அதைத் தொடர்ந்து நடிகை மைனா நந்தினி அவருடைய முதல் கணவரோடு காதலை தெரிவித்ததும் அவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்திருந்தனர். ஆனால் மைனா நந்தினியின் முதல் கணவர் சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதுபோல விஜே சித்ரா ஹேமந்த் என்பவரை காதலிப்பதாக செய்தி சேனலில் தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கும் குறிப்பிட்ட சேனலில் எங்கேஜ்மென்ட் நடத்தி வைத்திருந்தார்கள். ஆனால் சில மாதங்களில் விஜே சித்ரா இறந்து போய்விட்டார் அவருடைய இறப்பு எப்படி நடந்தது என்று இப்போது வரைக்கும் தெரியாமல் இருக்கிறது.
அதுபோல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவிற்கும் அவருடைய கணவர் முனீஸ் ராஜாவிற்கும் ஒரு தொலைக்காட்சியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதுவும் இப்போது முறிந்து விட்டது. இதனால் பிரபலங்கள் தொலைக்காட்சிகளில் திருமணம் செய்தால் அவர்களும் பிரிந்து விடுவார்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். திருஷ்டி விழுந்திருக்கலாம் போலும்.

இந்த நிலையில் இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் விவாகரத்து வருவது உண்மை என்று நினைக்கிறீர்களா? இல்லை இதுவெல்லாம் மூடநம்பிக்கை என்று நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தை உரக்கச் சொல்லுங்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications