சுந்தரி சீரியல் நடிகருக்கு எளிமையான என்கேஜ்மென்ட்.. மணப்பெண் இந்த பிரபலம் தான்!
சென்னை: சன் டிவியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் ஜிஷ்ணுவிற்கு நேற்று எளிமையாக எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது. அவர் யாரை திருமணம் செய்ய போகிறார் என்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
சின்னத்திரையில் கதாநாயகன் மட்டுமல்லாமல் வில்லனாகவும் துணை கதாபத்திரங்களிலும் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமாகி விடுகிறார்கள். அதிலும் பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் நடிகர்கள் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறிவிடுகிறார்கள். அதுபோல ஒருவர் தான் நடிகர் ஜிஷ்ணு. இவர் சுந்தரி சீரியல் இல் சுந்தரியின் கணவராக நடித்திருப்பார் ஆனால் அவரை ஏமாற்றி விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார். அதுபோல சுந்தரிக்கு இவர் பிரச்சனை மேல் பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருக்க, இவரை திட்டாத ரசிகர்களே கிடையாது.

மணப்பெண் இவர்தான்
இவர் கேரளாவில் சேர்ந்தவர் தான். தமிழில் சுந்தரி சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இவருக்கும் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன அபியாதிராக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய எங்கேஜ்மென்ட் நேற்று எளிமையாக நடந்திருக்கிறது. பல சின்னத்திரை செலிப்ரடிகளுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிபவர்தான் அபியாதிரா.
எளிமையான எங்கேஜ்மென்ட்
அது போல அபியாதிரா மேக்கப் தொடர்பான வகுப்புகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதோடு கூடுதல் ஒரு தகவல் இருக்கிறது அதாவது சுந்தரி சீரியலில் ஜிஷ்ணுவிற்க்கு இவர்தான் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருந்திருக்கிறார். பிறகு ஜிஷ்ணு மற்றும் அபியாதிரா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். இப்போது குடும்பத்தினரின் சம்மதத்தோடு வீட்டில் எளிமையாக எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது.

குவியும் வாழ்த்துக்கள்
இவர்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஜிஷ்ணுவரும், அபியாதிராவும் பிட்னஸ் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். அதுபோல ஜிஷ்ணு விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வைரல் வீடியோ
இந்த சீரியலுக்கான சூட்டிங் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் ஜிஷ்ணு மலையாளத்திலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை கேப்ரில்லாவின் வளைகாப்பில் ஜிஷ்ணு கலந்து கொண்டிருந்தார். அப்போது இந்த சீரியலில் அவருக்கு மகளாக நடித்த குழந்தையை தூக்கி வைத்து அவர் கொஞ்சி விளையாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications