தக் லைஃப் பட நடிகர் ஜோஜு ஜார்ஜ்க்கு படப்பிடிப்பில் திடீர் விபத்து! தொடரும் சிகிச்சை - ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தற்போது நடித்து வரும் வரவு திரைப்படத்தின் படப்பிடிப்பில், ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் செய்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டிலும் இதேபோல் ஒரு விபத்தில் இருந்து தப்பிய ஜோஜு ஜார்ஜ், மீண்டும் ஒருமுறை விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகன், வில்லன், தயாரிப்பாளர்
ஜோஜு ஜார்ஜ், மலையாளத் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர். ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், கமல்ஹாசனின் Thug Life படத்தில், ஒரு பயங்கர வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் ஜோஜு, இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
படப்பிடிப்பில் நடந்த விபரீதம்
ஷார்ஜி கைலாஸ் இயக்கி வரும் வரவு திரைப்படத்தின் படப்பிடிப்பு மூணாறில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் சேசிங் காட்சி படமாக்கப்பட்டபோது, ஜோஜு ஜார்ஜ் ஓட்டி வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஜோஜு ஜார்ஜ், நடிகர் தீபக் பாரம்போல் உட்பட துணை நடிகர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மூணாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஜோஜு ஜார்ஜ் விரைவில் குணமடைந்து, மீண்டும் படப்பிடிப்பிற்குத் திரும்புவார் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
வரவு திரைப்படத்தை ஷாஷி கைலாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் முரளி கோபி, அர்ஜுன் அசோகன், நடிகை சுகன்யா, பாபு ராஜ்,வின்சி அலோஷியஸ், சானியா ஐயப்பன் அஸ்வின் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அதுபோல கடந்த வருஷமும் ஒரு விபத்தில் ஜோஜு சார்ஜ் சிக்கி இருந்தார். பிறகு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் இப்போது மீண்டும் அவர் விபத்தில் சிக்கி இருப்பது அனைவரையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications