பாசக்கார நடிகராச்சே கலாபவன் மணி.. ரிசார்ட்டில் கள்ளக்காதலி? 100 பீர் குடித்த தாய்லாந்து நபர்! ஓ காட்
சென்னை: மற்ற மதுபானங்களில் உள்ளதுபோலவே, பீரிலும் ஆல்கஹால்தான் உள்ளது என்றாலும், பீர் குடிப்பது பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.. இவைகள் குறித்து மருத்துவர்கள் சொல்வதென்ன? தினமும் பீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? 1 மாதம் உணவு சாப்பிடாமல், பீர் மட்டுமே குடித்தால் என்னாகும்? தாய்லாந்தில் 44 வயது நபர் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்.. இதைக்கேள்விப்பட்டு ஒட்டுமொத்த பேரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
குறிப்பாக, பீர் குடிப்பதால் சூடு குறையும் என்ற பேச்சு உள்ளது.. ஆனால், இதற்கு எந்த அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.. ஓரளவு பீர் குடித்தால் இதயத்துக்கு நல்லது என்ற பேச்சும் உள்ளது. ஆனால், இதுவும் உண்மை கிடையாதாம்..

எந்த மது பானத்தை குடித்தாலும், அதன் பாதிப்பு குறிப்பாக, இதயத்துடிப்பு, ரத்தக்கொதிப்பு அதிகமாகிவிடுமாம்.. அதிலும் ஏற்கனவே இதய நோய் இருப்பவர்கள் மதுகுடித்தால், ஆபத்தான பல விளைவுகளை உண்டுபண்ணிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்,.
அதேபோல, பீர் குடித்தால் கிட்னியில் உள்ள கற்கள் கரையும் என்பார்கள்.. இதுவும் தவறான கணிப்புதானாம்.. பீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்றாலும், இது ஆரோக்கியமான எடை அதிகரிப்பு கிடையாது.. அதாவது 1 கிராம் ஆல்கஹால் 7 கலோரியை தந்துவிடுகிறதாம்..
100 பீர் பாட்டில்கள்
அதைவிட முக்கியமாக, நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து மதுவை அருந்தி வருபவர்களுக்கு ஆல்கஹாலிக் கார்டியோமையோபதி (Alcoholic cardiomyopathy) என்ற பாதிப்பு வருவதாகவும், இதனால் இதயத்தின் அறைகள் விரிவடைந்து இதய செயலிழப்பு ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அந்தவகையில் தற்போது தாய்லாந்தில் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பலரையும் திகைக்க வைத்துள்ளது.. தாய்லாந்தின் ராயாங் மாகாணத்தில் வசித்து வந்த தவிசாக் என்பவருக்கு 44 வயதாகிறது.. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
வெறும் 30 நாள் பீர்
ஆனாலும் மனைவியை பிரிந்து அவரால் இருக்க முடியவில்லை.. குடும்பத்தினரும், நண்பர்களும் துணையில்லாத சூழலில், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார் தவிசாக்.. இதனால் தினமும் பீர் குடித்து வந்தார்.. அதிலும், கடந்த 30 நாட்களாக சாப்பாடு சாப்பிடாமல், வெறும் பீர் மட்டுமே குடித்து வந்திருக்கிறார். இதனால், அவரது உடல்நிலை மோசமாகி, சில உறுப்புகள் செயலிழக்க தொடங்கியுள்ளன.
இதைக்கேள்விப்பட்டு ஒரு தொண்டு நிறுவனம் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, அவரது வீட்டுக்கு விரைந்தது.. ஆனால் தவிசாக் பரிதாபமாக இறந்துவிட்டார்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.. அப்போது அவரது ரூமில் கிட்டத்தட்ட 100 பீர் பாட்டில்கள் இருந்ததாம்.. ஓயாமல் பீர் குடித்ததால், தவிசாக்கின் மூளை செயலிழப்படைந்துள்ளது தெரியவந்துள்ளது..
பண்ணை வீட்டில் சூனியம்
இந்த நேரத்தில் மறைந்த நடிகர் கலாபவன் மணி குறித்தும் சொல்ல வேண்டியிருக்கிறது..
கேரளாவை சேர்ந்த கலாபவன் மணி, கடந்த 2016ல் தன்னுடைய பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
ரத்தம் கக்கி இறந்துள்ளதால், சொத்துக்காக பண்ணை வீட்டில் சூனியம் வைத்திருக்கலாம், கள்ளக்காதலி பண்ணை வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் பரவின.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், அவரது எத்தனால், மெத்தனால் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முடிவுகள் வேறாக இருந்ததால் குழப்பம் நீடித்தது. இதற்கு நடுவில் மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் சந்தேகங்களை கிளப்ப, இறுதியில் சிபிஐ இதனை கையில் எடுத்தது.
கலாபவன் மணி மரணம்
கடந்த 2019-ல் அறிக்கையையும் தாக்கல் செய்தது.. அதில், 'கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல, அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியன் காரணமாக ஏற்பட்ட கல்லீரல் நோயால்தான் அவர் மரணத்தை தழுவியிருந்தார் என்று கூறியது.
பிறகு கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் வெளியிட்ட தகவலில், "பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கலாபவன் மணி, தொடர்ந்து அதிகளவு பீர் குடித்ததால், பீரில் இருந்த மெத்தனால் ஆல்கஹால் கலாபவன் மணியின் உடலில் அதிகளவு சேர்ந்துள்ளது.
தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணமாகும். பீரில் மிகக்குறைந்த அளவே மெத்தனால் ஆல்கஹால் இருந்தாலும், தொடர்ந்து பீர் குடித்ததால் நடிகர் கலாபவன் மணியின் உடலில் அதிகளவு மெத்தனால் ஆல்கஹால் சேர்ந்துள்ளது.
சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் சாப்பிடும்போதும்கூட, பீர் குடித்துள்ளார்.. இதனால், உடலில் வேதிவினை ஏற்பட்டு உடல் கடுமையாக பாதித்துள்ளது... கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை.. இதுவே அவரது மரணத்துக்கு காரணம் என்று கூறியிருந்தார்.
நம்ம விஜயகாந்த் மாதிரியே
கலாபவன் மணி மலையாள நாட்டுப்புற பாடல்களை அதிகமாக பாடுவார்.. கம்யூனிச சித்தாந்தத்துடன் தொடர்புடையவர். மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பு இன்றும் கலாபவன் மணிக்கு உள்ளது.. நம்ம விஜயகாந்த் போல , பலருக்கும் சத்தமில்லாமல் உதவிகளை செய்தவர்.. தன்னுடைய உதவியாளர் கல்லீரல் சிகிச்சையால் அவதிப்படும்போது 10 லட்சம் ரூபாய் தந்து அவரை காப்பாற்றிய கலாபவன், தன்னுடைய கல்லீரலை காப்பாற்றி கொள்ளாமல் போய்விட்டார்..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications