பிரபல நடிகர் "நாசர்” ரஜினி படத்தில் நடந்த "உள்குத்து”.. களம் இறங்கிட்டாராமே கமல்.. லீக்கான ரகசியம்
சென்னை: தமிழ் சினிமாவில் எந்தவிதமான கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு தகுந்தார் போல் தங்களை மாற்றிக்கொண்டு அந்தக் கேரக்டராகவே மாறி நடிப்பது ஒரு சில கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அப்படி கேரக்டராகவே மாறி நடிக்க கூடியவர்களில் நாசர் குறிப்பிடத்தக்க நடிகர் ஆவார். கதாநாயகன் வில்லன் காமெடியன் என்று இவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம்.
நாசர் நடிக்க வாய்ப்பு தேடி வந்த பொழுதில் எம்ஜிஆர்,சிவாஜி என்று கதாநாயகர்களை மையமாக வைத்து சினிமா போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில், இயக்குனரை மையமாக வைத்து வரும் படங்களை தேடித்தேடி பார்க்கும் ஆவல் நாசரிடம் இருந்தது.அதுவும் இயக்குனர் கே.பாலச்சந்திரர் படங்களால் கவரப்பட்ட நாசர் அந்தப் படங்களை பார்த்தே பாதி சினிமாவை கற்றுக் கொண்டாராம்.
இளம் வயதிலேயே கல்லூரி படிப்பை முடித்து நன்கு ஆங்கிலம் பேசும் புலமையும் பெற்றிருந்திருக்கிறார் நாசர்.நன்கு ஆங்கிலம் பேசத் தெரிந்ததால் பிரபல தாஜ் ஹோட்டலில் பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டு அப்போதைய அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பிற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வந்துள்ளார். படிப்பு, வேலை என்று இருந்தாலும் கே.பாலச்சந்திரர் அலுவலகத்திற்கு வாய்ப்பு தேடி செல்வதையும் ஒரு முக்கிய வேலையாகவே செய்து வந்துள்ளார்.

அடிக்கடி தன்னுடைய அலுவலகம் பக்கம் நாசர் வருவதை பார்த்த கே. பாலச்சந்தர் இவரை அழைத்து எதற்காக வந்து சென்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார். நாசரும் தான் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிப்பதாகவும், தனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இதனை கேட்ட பாலச்சந்தர் ஒரு சீனை கூறி நாசரிடம் நடித்துக் காட்ட கூறியிருக்கிறார்.
நாசரும் நடித்து காட்டியுள்ளார். நாசர் நடிக்கும் போது அவரின் உடல் மொழியையும், மூக்கையும் கவனித்த கே.பாலச்சந்தர் நாசர் தன்னுடைய அடுத்த படத்திற்கு சரியாக வருவார் என்று கணித்து கல்யாண அகதிகள் படத்தில் அவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். புகை பிடிக்கும் பழக்கமே இல்லாத நாசர் அந்த படத்திற்காக புகை பிடிப்பதற்கு பழகி ஒரிஜினல் செயின் ஸ்மோக்கர் போல் நடித்திருந்தாராம்.அந்த அளவிற்கு நடிப்பிற்காக அர்ப்பணிப்புடன் இருந்திருக்கிறார்.
என்னதான் சில படங்கள் நடித்தாலும் இவர் பெரிய அளவு பிரபலமாக ஆரம்பித்தது ரஜினியுடன் இணைந்து நடித்த வேலைக்காரன் படத்தில் தான். அந்த படத்தில் ரஜினி வேலை செய்யும் ஹோட்டல் மேனேஜராக செம பர்பாமன்ஸ் கொடுத்திருப்பார். வேலைக்காரன் படத்தின் பல காட்சிகளில் ரஜினியையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு இவருடைய பெர்பாமன்ஸ் இருந்ததாகவும், அதனை ரஜினி தலையிட்டு எடிட் செய்து தூக்கி விட்டதாகவும், இதனால் ரஜினிக்கும் நாசருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் ஒரு ரூமர் அந்த நேரத்தில் பரவியிருந்தது.
ஆனால் நாசருக்கு உள்ளிருந்த அற்புதமான கலைஞனை பற்றி தெரிந்திருந்த கமல் அவரை அழைத்து தன்னுடைய படங்களில் அடுத்தடுத்து பயன்படுத்த துவங்கினார். கிட்டத்தட்ட ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கம்பெனி நடிகர் போலவே நாசர் மாறிவிட்டாரோ என்று சொல்லும் அளவிற்கு கமலின் அனைத்து படங்களிலும் ஏறக்குறைய நாசருக்கு வெயிட்டான கேரக்டர் இருக்கும்.
மற்ற நடிகர்களை விட கமல் கொஞ்சம் வித்தியாசமானவர் படத்திற்கு தேவைப்பட்டால் தன்னுடைய நடிப்பை ஓவர் டேக் செய்தாலும் பரவாயில்லை பிற நடிகர்களை நடிக்க வைப்பதற்கு தயங்காமல் இடம் கொடுப்பார்.அதற்கு உதாரணமாக குருதிப்புனல், தேவர் மகன் போன்ற படங்களை குறிப்பிடலாம். அந்தப் படத்தில் பல காட்சிகளில் கமலை மிஞ்சும் அளவிற்கு பெர்பாமன்ஸ் கொடுத்திருப்பார் நாசர். இன்றைய தேதியிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் மிகவும் பிசியாக நடித்து வரும் நடிகராக நாசர் இருக்கிறார்.
-
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications