அப்பாவை நினைத்து கண்கலங்கிய விஜயகாந்த் மகன்கள்.. கமல்ஹாசன் மகள் சொன்ன ஆறுதல் வார்த்தை
சென்னை: தேமுதிக தலைவரான விஜயகாந்தின் பிறந்த நாளான இன்று அவருடைய சிலை திறப்பு விழாவில் அவருடைய மகன்கள் கண்கலங்கி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் அந்த வீடியோவை விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் வெளியிட்டு இருந்த நிலையில் விஜயகாந்தின் மகன்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் ஆறுதல் சொல்லி கமெண்ட் போட்டு இருக்கிறார்.
மறைந்த தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் இன்று அவருடைய ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் இறந்த பிறகு வந்த முதல் பிறந்த நாளான இன்று அவருக்கு சிலை திறக்கப்பட்டு இருக்கிறது. கம்பீரமாக விஜயகாந்த் அந்த சிலையில் சிரித்துக் கொண்டு இருந்தாலும் அதை பார்க்கும் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எமோஷனலாகி கண்கலங்க வைத்து இருக்கிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் நினைவிடத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் நிலையில் காலையில் இருந்து அங்கு ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்தின் சிலை திறப்பு நேரத்தில் விஜயகாந்தின் இரண்டு மகன்கள் மற்றும் மனைவி கண்ணீரோடு அவரை வணங்கி இருக்கிறார்கள். அதை பார்ப்போரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறது.

விஜயகாந்தின் சிலை திறப்பு விழாவை விஜயகாந்த் உடைய மகன் விஜய பிரபாகரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்த நிலையில் அதற்கு நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன், "Sending you and your family strength" என்று ஆறுதலாக கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதுபோல பல பிரபலங்களும் ரசிகர்களும் விஜயகாந்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு விஜயகாந்தின் சிலை திறப்பு விழாவில் கண்கலங்கி அழுத அவருடைய மகன்களில் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சில நிமிடங்களில் திடீரென மயக்கம் போட்டு விட அவர் மருத்துவமனைக்கு அவர்களுடைய காரில் கொண்டு சென்றதும் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்ட நெரிசல் காரணமாக அவர் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications