விஜய்யை எவ்வளவோ விமர்சித்தேன்.. நேரில் எங்கிட்ட கேட்ட ஒரு கேள்வி மறக்க முடியாது! கருணாஸ் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபோது அவரை கடுமையாக விமர்சித்தவர்களில் நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸும் ஒருவர். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அதற்கான தகுதியை வளர்த்திருக்க வேண்டும் என்றெல்லாம் கருணாஸ் பேசி இருந்தார். ஆனால் அவர் முதல்வரானதும் திரைத்துறையினர் சார்பாக அவரை சந்தித்து இருந்தார். இது குறித்து பேசுகையில் கருணாஸ் விஜயை பற்றி பெருமையாக இப்போது பேசி இருப்பது தான் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் நேரத்தில் கருணாஸ் பேசிய சில விஷயங்கள் இன்னும் உங்களுக்கு நினைவிற்கு இருக்கலாம். நடிகர் அரசியலுக்கு வருவது தவறு இல்லை, ஆனால் நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என்று நினைப்பது தவறு. அதற்கான தகுதியை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். விஜய் 200 கோடி வருமானத்தை விட்டுட்டு அரசியலுக்கு வராருன்னு அவரை பற்றி பெருமையாக பேசுறீங்களே அவரை 200 கோடி விட்டுட்டு வர சொன்னது யாரு என்றெல்லாம் கருணாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடிகர் கருணாஸ் பேட்டி

ஆனால் இப்போது கருணாஸின் மாற்றம் ரசிகர்களுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சமீபத்தில் அவர் பேட்டியில் பேசும்போது, விஜய் முதல்வரான பிறகு நடிகர் சங்கம் சார்பாக அவரை சந்திக்க போயிருந்தேன். அப்போ அவர் நான் இதற்கு முன்பு பேசிய விஷயங்கள் எதையுமே என்னிடம் கேட்கவில்லை. என்னிடம் உங்கள் பையன் எப்படி இருக்கிறான்? இப்போ என்ன பண்ணிட்டு இருக்கிறான்? கேட்டதா சொல்லுங்க என்று சொன்னாரு.

Actor Karunas Vijay

விஜய் கேட்ட கேள்வி

நான் அவரை எவ்வளவோ பேசி இருக்கிறேன் ஆனால் அவர் அதை எல்லாம் பற்றி என்கிட்ட கேட்காம என் பையனை பற்றி தான் கேட்டாரு. அவர் எவ்வளவோ பிஸியாக இருந்தாலும் எல்லாத்தையும் கவனிச்சிட்டு தான் இருக்கிறார். சினிமாவில் யார் நல்லா பண்றாங்க? சினிமாவில் என்ன நடக்கிறது? என்பது அவர் நோட் பண்றாரு. அவர் பாக்குறதை பலருக்கு சொல்றாரு. இது நல்ல விஷயம் தானே? என்று கருணாஸ் விஜய் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.

விஜய் சேதுபதி பேச்சை வெளுத்து வாங்கிய நடிகை அம்பிகா.. அந்த வார்த்தை தான் சந்தேகமாக இருக்குதாம்!
அதோடு விஜய்யின் தற்போதைய ஆட்சியை பற்றி பேசும்போது கூட விஜய் நல்ல விஷயங்களை முன்னெடுத்து வருகிறார். அவருடைய நோக்கம் சரியாகத்தான் இருக்கிறது. இப்போதைக்கு அவர் ஆட்சிக்கு வந்து கொஞ்ச நாட்கள் தான ஆகிறது. இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்து பார்த்தால் தான் அவருடைய ஆட்சி எப்படி இருக்கிறது என்று முழுமையாக சொல்ல முடியும் என்றும் சொல்லியிருக்கிறார். இதை பிடித்துக் கொண்ட நெட்டிசன்கள் முதல்வரை போய் பார்த்துட்டு வந்ததும் உங்களுடைய மனதில் மாற்றம் வந்துவிட்டதா? அல்லது திமுக கட்சியை விட்டு நீங்க விலகி தவகாவில் இணைய போகிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

திருமலை பட அனுபவம்

ஆனால் அவர் வந்து பேட்டியில் சொன்ன விஷயம் தான் வேற. நான் இதுவரைக்கும் விஜயை அரசியல் ரீதியாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் நடிகனாக நாங்க நல்ல நண்பர்கள்தான். திருமலை படத்தில் நாங்க 2 பேரும் ஒன்றாக நடித்திருக்கிறோம். அப்போ அவருடன் நான் ரொம்பவே பழகி இருக்கிறேன். அவருடைய கேரக்டர் பற்றி எனக்கு தெரியும். அரசியல் ரீதியாக மட்டும் தான் நான் விமர்சித்தேனே தவிர அவரை பர்சனலாக நான் தாக்க வில்லையே என்றும் சொல்லி இருக்கிறார்.

சரி எது எப்படியோ இப்போ நெட்டிசன்களுக்கு கருணாஸ் பேசிய ஒரு பேட்டி கிடைத்துவிட்டது. விஜய் ரசிகர்கள் கருணாஸின் மாற்றத்தை பாராட்டி வந்தாலும், சிலர் கருணாஸின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என்று தோண்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+