விஜய் சேதுபதி பேச்சை வெளுத்து வாங்கிய நடிகை அம்பிகா.. அந்த வார்த்தை தான் சந்தேகமாக இருக்குதாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த ஒரு லீடர்ஷிப் பிரச்சனை இவ்வளவு பெரிய விவாதம் ஆகும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த சீசனின் ஷாதிகாவின் லீடர்ஷிப் குறித்து விஜய் சேதுபதி பேசிய விதம் நிகழ்ச்சியை தாண்டி அரசியல் வரை சென்று நிற்கிறது. அதனால் பலர் விஜய் சேதுபதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள் அதில் நடிகை அம்பிகாவும் இணைந்து இருக்கிறார்.

நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசும்போது, கும்பலில் கோவிந்தா போட்டா தலைவனாக முடியாது, ஒரு பதவியில் இருந்தால் எல்லாரும் கேள்வி கேட்க தான் செய்வாங்க அதற்கு கண்ணீர் விட்டு அழுது சமாளிக்க முடியாது என்று விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்களை வைத்து அவர் முதல்வர் விஜயை மறைமுகமாக விமர்சித்தாரா? என்ற கேள்வி சோசியல் மீடியாவில் இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி விஜய் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.

அம்பிகாவின் பேட்டி

பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவத்தைப் பற்றிய பேச்சு என்று நிகழ்ச்சி தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான் நடிகை அம்பிகா கொடுத்திருக்கும் பேட்டி இப்போது வைரல் ஆகி வருகிறது. அதிலும் அவர் கேட்கும் கேள்விகள் இப்போது பலருடைய கேள்வியாக இருக்கிறது. நிகழ்ச்சியை பற்றி தான் பேசினேன் என்று விஜய் சேதுபதி சொன்னாலும் பார்க்கிற நமக்குத் தெரியாதா? அவருக்கு ஒருவேளை அரசியல் கருத்து சொல்ல வேண்டும் என்றால் அதற்கான மேடை அந்த நிகழ்ச்சி கிடையாது.

அவருக்கு அரசியல் கருத்து சொல்ல முழு உரிமை இருக்கிறது. அதற்கான அவர் தனிப்பட்ட வகையில் விமர்சிக்கலாம். ஆனால் நிகழ்ச்சியில் மறைமுகமாக இப்படி பேசினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறாரா? அவர் பேசுவது தலையை சுற்றி மூக்கை தொடுவது போல. அரசியல் என்றால் அரசியலாக நேரடியாக பேசுங்கள். ஒரு நிகழ்ச்சிக்குள் வேறு ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு இன்னொரு விஷயத்தை மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. அதுதான் எனக்கு சரியாக படவில்லை என்று அம்பிகா பேசியிருக்கிறார்.

Actress Ambika Vijay Sethupathi Vijay

அம்பிகாவின் கமெண்ட்

இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதுபோல நேற்று முன்தினம் சீரியல் நடிகர் அருணும் விஜய் சேதுபதி பேச்சுக்கு எதிராக ஒரு பதிவு வெளியிட்டு இருந்தார். அந்த பதிவிலும் அம்பிகா விஜய் சேதுபதி பேசியது எனக்கு சரியாக படவில்லை என்று கமெண்ட் கொடுத்து இருந்தார். அப்போதே இந்த விஷயம் பேசப்பட்ட நிலையில் இப்போது அதே விஷயத்தை அவர் ஒரு பேட்டியிலும் விரிவாக பேசிவிட்டார்.

அதிகரிக்கும் நெகட்டிவ்

இதற்கிடையே விஜய் சேதுபதியின் பேச்சு அரசியல் விமர்சனமாக புரிந்து கொள்ளப்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சி தரப்பிலிருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டில் நடந்த தலைமை மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகளை பற்றி தான் பேசினார். எந்த அரசியல் நபரையும் குறி வைத்து அந்த கருத்துக்கள் சொல்லப்படவில்லை என்று சொல்லப்பட்டாலும் நெட்டிசன்கள் விடாமல் விஜய் சேதுபதியை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

கேள்வி கேட்டால் பதில் சொல்லணும், சமாளிக்க கூடாது.. விஜய் சேதுபதி பேச்சால் புதிய பஞ்சாயத்து
இதுவரைக்கும் யாருன்னு தெரியாம இருந்தவங்க கூட இப்போ சோசியல் மீடியாவில் விஜய் சேதுபதியின் பழைய பேட்டிகள், நிகழ்ச்சிகளில் அவர் பேசிய விஷயங்களை எல்லாம் எடுத்து போட்டு அவரை அடிக்கிறார்கள். இதனால் இந்த வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி இதை வைத்து எப்படியும் பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+