மகளின் கல்யாணத்தை பிரம்மாண்டமாக முடித்த கிங்காங்.. மணமேடையில் கண்கலங்கிட்டாரே! மாப்பிள்ளை இவர்தானா?
சென்னை: நடிகர் கிங்காங் தன்னுடைய மகள் திருமணத்தை இன்று (ஜூலை 10) அன்று சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய மகள் கல்யாண கோலத்தில் இருக்கும்போது கிங்காங் சந்தோஷத்தில் பூரிப்பாக இருக்கிறார். அதோடு மகளுக்கு கல்யாணம் முடிந்து அடுத்த நொடி கிங்காங் ஆனந்த கண்ணீர் விட்டு இருக்கிறார்.
நடிகர் கிங்காங் தன்னுடைய மகள் கல்யாணத்திற்கு ஆக சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் நேரில் சென்று திருமண பத்திரிக்கை கொடுத்து இருந்தார். மககிங் என்று சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் கிங்காங்கின் சொந்த பெயர் சங்கர் ஏழுமலை தான். ஆனால் சினிமாவில் அவர் கிங்காங் என்று கேரக்டரில் அறிமுகமானதால் அந்த பெயரிலேயே சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். நகைச்சுவை கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்த கிங்காங் அதிசய பிறவி படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

அதற்குப் பிறகு இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அதிலும் ஐந்து மொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பலமொழிகளிலும் இவர் சினிமாவில் நடித்திருக்கிறார். நடிகர் விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்திருந்தார்.
அது கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்களுடனும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் கிங்காங் தன்னுடைய மகனுடன் கலந்து விளையாடி இருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு இன்று ஜூலை 10ஆம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் எம்பிகே மஹாலில் தான் கிங்காங் மகள் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். இதற்காக சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்து அழைத்து வந்தார். ஆனால் மகள் திருமணம் இப்போது எளிமையாக கோவிலில் வைத்திருக்கிறார். இனி ரிசப்ஷனுக்கு பிரபலங்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் தன்னுடைய மகள் திருமணம் மேடையில் கிங்காங் அமர்ந்திருக்கும் போது பதட்டத்துடனே அமர்ந்திருந்தார். மாப்பிள்ளை தாலி கட்டிய அடுத்த நொடி கிங்காங் ஆனந்த கண்ணீர் விட்டிருந்தார். அதுபோல அவருடைய மகளும் எமோஷனலாகி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது கிங்காங் மகளுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications