Kingkong: கல்யாணத்திற்கு ஆரத்தி எடுத்த போது! "அவர்" சொன்னது அம்மா காதில் விழுந்தது! கிங்காங் வேதனை
சென்னை: முதல் குழந்தை பிறக்குற வரைக்கும் நான் பயந்து கொண்டே இருந்தேன். நல்லபடியாக பிறக்கணும்னு நான் வேண்டாத தெய்வமில்லை என நடிகர் கிங்காங் தெரிவித்துள்ளார். அண்மையில்தான் தனது மகளுக்கு ஊரே மெச்சும் அளவுக்கு திருமணம் செய்து வைத்தார் கிங்காங்.
உள்ளம் நல்லாயிருந்தா ஊனம் ஒரு குறையில்லை.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நிறைய பேரின் அன்பையே சம்பாதித்துள்ளார் நடிகர் கிங்காங். இவருக்கு 53 வயதானாலும் அவர் 3 அடி உயரத்தில்தான் இருக்கிறார். ஏதோ மரபணு பிரச்சினையால் அவர் உயரமாக வளராமல் போய்விட்டார்.

ஆனால் தனது உயரம் குறைவை வைத்து என்ன செய்யலாம் என யோசித்து திரைத்துறைக்கு வந்தார். சங்கர் ஏழுமலை என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் "அதிசய பிறவி"யில் ரஜினியுடன் நடித்திருந்தார். அதில் டிஸ்கோ டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது. அது முதல் இவரை லிட்டில் சூப்பர்ஸ்டார் என்றே அழைத்தனர்.
எந்த படங்களில் கிங்காங்
இதையடுத்து "போக்கிரி" படத்திலும் "கருப்பசாமி குத்தகைதாரர்" படத்திலும் "கந்தசாமி" படத்திலும் வடிவேலுவுடன் நடித்து காமெடியில் கலக்கினார் கிங்காங். "அதிசய பிறவி"க்கு முன்பு "ஊரை தெரிஞ்சிகிட்டேன்", "அன்பு கட்டளை", "நெத்தியடி" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
டிஸ்கோ டான்ஸ் ஆடிய கிங்காங்
அது போல் "சின்ன பசங்க நாங்க", "ஜமீன் கோட்டை", "கட்டப்பஞ்சாயத்து", "பாஞ்சாலங்குறிச்சி", "நரிவேட்டை" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் 2024 இல் வெளியான "ராஜாகிளி".
இத்தனை மொழியிலுமா
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, இந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவருடைய மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக கன்னட நடிகர் சிவராஜ்குமார் முதல் சிவகார்த்திகேயன் வரை பலருக்கு பத்திரிகை கொடுத்திருந்தார்.
சிறிய வேடம்
அது போல் அரசியல்வாதிகளுக்கும் இவர் பத்திரிகை கொடுத்திருந்தார். சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் பெரிய நடிகர்களுக்கெல்லாம் இவர் தேடி தேடி பத்திரிகை கொடுத்தது விமர்சனத்துக்குள்ளானது. அதாவது அவர்கள் ஏதாவது பண உதவி செய்வார்கள் என்று நினைத்துதான் கிங்காங் இப்படி செய்கிறார் என்றெல்லாம் கிண்டல் செய்தனர். ஆனால் கிங்காங் யாரிடமும் ஒரு ரூபாய் கூட கடனாக கேட்கவில்லையாம்.
மகள் கீர்த்தனா திருமணம்
சினிமாவில் கொஞ்சம் சம்பாதித்தாலும் தனது நல்ல கேரக்டரால் அதை வேறு வழிகளில் அழிக்காமல் பத்திரப்படுத்தி வைத்து இன்று ஊரே மெச்சும் அளவுக்கு திருமணத்தை நடத்தினார். ஆனால் கிங்காங் அழைப்பு விடுத்தது போல் எந்த நடிகரும், அவர் மகள் திருமணத்திற்கு வரவில்லை.
இடுப்பில் தூக்கிய ஜெயக்குமார்
"இதுதான் கிங்காங்கிற்கு சக நடிகர்கள் கொடுக்கும் மரியாதை, இதற்கா விழுந்து விழுந்து பத்திரிகை கொடுத்தார்" என்றெல்லாம் கேலி பேசப்பட்டது. ஆனால் எல்லாத்தையும் அடித்து நொறுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கிங்காங் வீட்டு திருமணத்திற்கு சென்று அவரை தூக்கி இடுப்பில் உட்கார வைத்துக் கொண்டது, கிங்காங்கிற்கு எத்தனை நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டியது.
முதல்வர் ஸ்டாலின்- கிங்காங் நெகிழ்ச்சி
அது போல் திடீரென முதல்வர் ஸ்டாலின், கிங்காங் மகளின் வரவேற்பு நிகழ்வுக்கு வந்திருந்தது, கிங்காங் சாதாரண நடிகர் அல்ல, முதல்வரின் மனதையும் வென்றவர், அன்பை சம்பாதித்தவர் என்ற அடைமொழிகளை ஏற்படுத்தியது. இதனால் எந்த நடிகர், நடிகைகள் வராமல் போனாலும் முதல்வர் வந்து கிங்காங்கிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் பெருமையை தேடி கொடுத்துவிட்டார்.
விஜய் சேதுபதி வாழ்த்து
இந்த நிலையில் விஜய் சேதுபதி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் மணமக்களை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து வாழ்த்தினர். இந்த நிலையில் கிங்காங் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "கல்யாணம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தப்ப ஆரத்தி எடுத்தாங்க. அப்போ ஒருத்தர் எங்க அம்மா காதுல விழுற மாதிரி 'இவனுக்கெல்லாம் ஒரு கல்யாணம்னு' கிண்டல் செய்தார்.
குழந்தை எப்படி பிறக்குமோ
அதனால் குழந்தை பிறக்குற வகை நம்மள மாதிரி எங்கள் குழந்தை பிறந்திடும்னு ஒரு பயம். அதுனால்தான் கல்யாணம் பண்ணவே பயந்தேன். ஆனால் ஆண்டவன் புண்ணியத்துல நல்லபடியா என் மகள் பிறந்தாள்". இவ்வாறு கிங்காங் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications