மகள் திருமணத்திற்கு பிறகு வேதனையோடு பேசிய கிங்காங்.. இப்படி எல்லாமா சொல்லுவாங்க? உருக்கம்
சென்னை: நடிகர் கிங் காங் தன்னுடைய மகள் திருமணத்தை நேற்று முன்தினம் பிரம்மாண்டமாக நடத்தி முடித்து இருந்தார். இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். அதே நேரத்தில் மகள் கல்யாணத்திற்கு பிறகு வேதனையோடு கிங் காங் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் கிங் காங் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் ரஜினி, கமல், ஷாருக்கான் உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல இவருடைய டான்ஸ் பலருக்கும் ஃபேவரைட் ஆனது. இவர் உயரம் குறைவாக இருப்பதைப் பற்றி பலர் ஏளனமாக பேசி இருந்தாலும் அதையே தனக்கு பிளஸ் ஆக மாற்றி பல படங்களில் நடித்து பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகள் கீர்த்தனா திருமணத்திற்காக பல பிரபலங்களுக்கும் நேரில் சென்று பத்திரிக்கை கொடுத்து இருந்தார். ஜூலை பத்தாம் தேதி கிங்காங் மகள் கீர்த்தனாவிற்கும் நவீன் என்பவருக்கு கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உட்பட பல அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அதேபோல நடிகர் விஷால் உட்பட பல சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் காமெடி நடிகர் ஆன கிங்காங் பல பிரபலங்களுக்கும் தேடி தேடி பத்திரிக்கை வைத்தது பணத்திற்காகத்தான் என்று சிலர் விமர்சித்தது குறித்து கிங்காங் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் பேசும் போது நான் எல்லோருக்கும் என் மகள் கல்யாணத்திற்கு பத்திரிக்கை கொடுத்தது பணத்திற்காக என்று சிலர் என் போஸ்ட்க்கு கீழே கமெண்ட் போடுகிறார்கள்.
நான் மனசார சொல்றேன் நான் யாருகிட்டயும் ஒரு ரூபாய் எதிர்பார்த்து பத்திரிக்கை வைக்கவில்லை. எல்லாருடைய ஆசீர்வாதமும் என்னுடைய மகளுக்கு வேண்டும் என்று தான் கூப்பிட்டேன் என்று கிங்காங் பேசி இருக்கிறார். அவருக்கு பலரும் ஆறுதலாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல கிங்காங் பற்றி அவருடைய மகள் பேசும் போது என்னுடைய அப்பா என்னுடைய கல்யாணத்தை இவ்வளவு பெருசாக நடத்துவார் என்று நான் நினைக்கவே இல்லை கண்கலங்க பேசி இருக்கிறார்.

மேலும் நடிகர் கிங்காங் மகள் பேசும்போது, நானும் நவீனும் இது ஐந்து வருடங்களாக காதலித்து வந்தோம். முதலில் குடும்பத்திற்கு தெரிய வந்தபோது எல்லோரும் மறுத்து தெரிவித்தாலும் பிறகு என்னுடைய பாட்டி என்னுடைய கல்யாணத்திற்கு எல்லாரையும் சம்மதிக்க வைத்து விட்டார். இப்போது அவர் இறந்து போய்விட்டார். அவருடைய திதி நாளைக்கு முன்பு என்னுடைய கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அதற்காகத்தான் இந்த கல்யாண ஏற்பாடு. இவ்வளவு பிரமாண்டமாக நடக்கிறது. அதோடு என்னுடைய அப்பாவின் இத்தனை வருட சேமிப்பு எல்லாவற்றையும் என் கல்யாணத்திற்காகத்தான் அவர் செலவு செய்திருக்கிறார் என்று கீர்த்தனா தன்னுடைய தந்தை கிங்காங் குறித்து பெருமையாக பேசி இருந்தார்.
-
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications