கலகலப்பு படத்தில் நடித்த கோதண்டராமன் காலமானார்.. அவரோட அந்த ஆசை நிறைவேறலையே!
சென்னை: சுந்தர் சி இயக்கிய கலகலப்பு திரைப்படத்தில் சந்தானத்தின் அடியாளில் ஒருவராக பேய் கேரக்டரில் நடித்த நடிகர் கோதண்டராமன் (வயது 65) இன்று உடல்நிலை குறைவால் காலமானார்.
ஒரு சிலர் பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் பெரிய அளவில் அவர்களுக்கு பெயர் கிடைத்ததில்லை. அதுபோலத்தான் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த கோதண்டராமன் வாழ்க்கையிலும் இருந்திருக்கிறது.

ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விமல், ஓவியா, மிர்ச்சி சிவா, அஞ்சலி நடிப்பில் வெளியான கலகலப்பு திரைப்படத்திற்கு பிறகு தான் கோதண்ட ராமனுக்கு ஒரு பிரபலம் கிடைத்தது. அந்த படத்தில் சந்தானத்தில் அடியாள்களின் ஒருவராக நடித்து கோதண்டம் பேமஸ் ஆகி இருந்தார்.
கலகலப்பு திரைப்படம் எவ்வளவு மன இறுக்கத்தோடு இருப்பவர்களையும் சிரிக்க வைத்து விடும். அந்த அளவிற்கு காமெடிகள் அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் சந்தானம் அஞ்சலியை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருப்பார்.
சந்தானம் அந்த ஊரில் பெரிய ரவுடி போல தன்னை காட்டி கொள்வதற்காக ஒரு சிலரை கூடவே கூட்டிக் கொண்டு திரிவார். அதிலும் மண்டகசாயம், திமிங்கலம், பேய் போன்ற மூன்று பேர் இவருக்கு கூடவே சுற்றிக் கொண்டிருப்பார்கள். அஞ்சலியை தூக்குவதற்காக சந்தானம் போய்க் கொண்டிருக்கும் போது கூட காரில் திமிங்கலம், பேய், மண்டகசாயம் மூன்று பேரும் சந்தானத்திடம் அடி வாங்குவது காமெடியாக இருக்கும்.

அதுபோல ஆற்றில் அஞ்சலி குளிக்கும் போது தொலைந்து போக அவரை தேடும்போது அம்மாவை புடிச்சுட்டேன் என்று சந்தானத்தை தண்ணீரில் இருந்து கோதண்டராமன் தூக்கம் காட்சி இப்போ பார்த்தாலும் எல்லோரையும் சிரிக்க வைக்கும் காட்சியாக தான் இருக்கும்.
ஆனால் கலகலப்பு திரைப்படத்திற்கு பிறகு அதுபோல காட்சிகளில் தனக்கு நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்ப்போடு இருந்த கோதண்டத்திற்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது. அதுபோல கோதண்ட ராமனின் பெயர் கிருஷ்ணன் என்பதுதானாம்.
சினிமாவில் பார்ப்பதற்கு தான் கோதண்டராமன் கரடு முரடான ஆளாக தெளிவாக தெரிவாரே தவிர அவர் ரொம்பவும் மென்மையான நபராம். அவர் திறமையான நடிகராம். நடிக்கிற காட்சிகளைப் பற்றி ஒரு முறை சொன்னாலே பிடித்துக் கொள்வார்.
எவ்வளவு பெரிய ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் கூட எளிதாக செய்து அசத்துவார். ஆனால் கலகலப்பு வெற்றிக்கு பிறகு ஒரு விபத்தில் அவருடைய காலில் அடிபட்டு இருக்கிறது. மினி லாரி ஒன்று அவருடைய காலில் ஏறியதில் அவரால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. ஆனால் அதை அவரால் சரியாக செய்ய முடியாததால் அதற்கு பிறகு வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டது என்று அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள். இன்று அவரை இழந்து இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications