லாரன்ஸ் தொடங்கிய “மாற்றம் ஆரம்பம்”.. வந்து இறங்கிய 10 ட்ராக்டர்.. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி
சென்னை: மே ஒன்றாம் தேதியான இன்று "நடிகர் லாரன்ஸ்" "மாற்றம் ஆரம்பம்" என்ற அமைப்பு ஒன்றை தொடங்கியிருக்கிறார் அதன் மூலம் பல்வேறு உதவிகளை செய்ய இருக்கிறார். அதன் முதல் கட்டமாக ஏழை விவசாயிகளுக்கு தன் கையால் தானே டிராக்டர் வழங்க போவதாக அறிவித்திருக்கிறார்.
நடிகர் லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல் பல ஆசிரமங்களை நடத்தி வருகிறார். பல நற்பணிகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார். அந்த அமைப்பின் மூலம் இல்லாத மக்களுக்கும் தேவையுள்ள மக்களுக்கும் சேவை செய்ய போவதாக அறிவித்திருந்தார்.

அதில் அவர் படிக்க வைத்த பல இளைஞர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யப் போகிறோம் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதை லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அவர்களோடு பல நடிகர் நடிகைகளும் லாரன்ஸின் "மாற்றம்" என்ற அமைப்பில் சேர இருப்பதாக கூறியிருந்தனர்.
அதிலும் நடிகர் எஸ்.ஜே சூர்யா, kpy பாலா, அறந்தாங்கி நிஷா என்று பலர் நாங்கள் இந்த அமைப்பில் சேர்ந்து இருக்கிறோம் என்று கூறியிருந்தனர். அந்த வகையில் எஸ்.ஜே சூர்யா இதுகுறித்து வெளியிட்ட பதிவில், "மாற்றம் அமைப்பில் சேர்ந்த தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றும். மே ஒன்று மாஸ்டர் யாரை காண்பித்து உதவி செய்ய சொன்னாலும் நான் செய்வேன். ஃபார் மை பாய் சீசர்" என்று ஜிகர்தண்டா படத்தில் வசனத்தையும் பேசிய வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது பலருடைய பாராட்டுகளையும் பெற்று வந்தது. இந்த நிலையில் மே ஒன்றாம் தேதியான இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் எல்லோருக்கும் வணக்கம்... எல்லோருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள். சேவை என்ற அறக்கட்டளை மூலம் மாற்றம் என்ற பெயரில் உங்கள் ஆசீர்வாதத்தோடு மாற்றம் ஆரம்பமாகப் போகிறது என்று கூறியிருக்கிறார்.
அதோடு தான் தொடங்கும் முதல் மாற்றத்தை அந்த வீடியோவில் காட்டி இருக்கிறார். அதாவது நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எனது சொந்த பணத்தில் முதல் தொடக்கமாக பத்து டிராக்டர்கள் வழங்கப்படும். தேவைப்படும் மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்த தன்னலமற்ற பயணத்தில் அனைவரும் சேர்ந்து எங்களுக்கு ஆதரவு அளிக்கவும் வார்த்தைகளை விட செயல் சத்தமாக பேசுகிறது என்று அதில் கூறி இருக்கிறார்.

அதோடு இனி தானே பல கிராமங்களுக்கு சென்று கஷ்டப்படும் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தன் கையாலேயே டிராக்டர் வழங்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவிற்கு அதிகமான லைக்குகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இந்த மாற்றம் என்று அமைப்பில் இணைந்த நடிகர் பாலா தான் பலருக்கு உதவி செய்து கொண்டு இருந்தாலும் இப்போது லாரன்ஸ் மாஸ்டரோடு உதவி செய்வது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது...
லாரன்ஸ் அண்ணா என்னை மாடியில் இருந்து குதிக்க சொன்னாலும் நான் குதித்து விடுவேன் என்று பேசியது பலராலும் பாராட்டப்பட்டது. இப்போது உழைப்பாளர் தினத்தில் லாரன்ஸ் தொடங்கி இருக்கும் மாற்றம் ஆரம்பம் என்ற சேவைக்கு பலர் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications