கோவை குணா இறந்தது இதனால்தானா.. என்ன சொல்ல வருகிறார் அசத்த போவது யார் நடுவர் மதன் பாப்?
எப்போதும் கெட்ட பழக்கம் அளவா இருக்க வேண்டும்- கோவை குணா குறித்து மதன் பாப் வேதனை பேட்டி
சென்னை: கெட்ட பழக்கம் என்றால் எப்போதுமே அளவாக இருக்க வேண்டும் என கோவை குணா உயிரிழப்பு குறித்து மதன் பாப் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அசத்த போவது யார் எனும் நிகழ்ச்சி மூலம் நிறைய ஸ்டான்ட் அப் காமெடியன்கள், மிமிக்ரி ஆர்டிஸ்ட்கள், காமெடியன்கள் உருவாக்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை குணா என்பவர் பங்கேற்று தனது உடல் மொழியாலேயே அனைவரையும் சிரிக்க வைத்து வந்தார். இந்த நிகழ்ச்சியை பார்த்தாலே எத்தனை கவலைகள் இருந்தாலும் அது ஓடி போய்விடும்.

நிகழ்ச்சி
அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சியை பார்த்து மக்கள் வயிறு வலிக்க சிரித்தனர். கோவை குணா செய்யும் மிமிக்ரிகளை அவர் சொல்லாமலேயே அவரது உடல் மொழியை கொண்டு யாரை போல் மிமிக்ரி செய்ய போகிறார் என்பதை கண்டுபிடித்து விடலாம். ஒரு நடிகரை போல் மிமிக்ரி என்றாலே அந்த நடிகராகவே உடல் மொழியையும் முக பாவனையையும் கொண்டு வந்துவிடுவார்.

நடிகர்கள்
இவர் நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல், கவுண்டமணி, ராதாரவி, சுருளிராஜன், வில்லன் நடிகர்கள் எம்.ஆர். ராதா, அசோகன், நம்பியார், மனோகரன் உள்ளிட்டோரை போல் பேசுவார். இவர் சென்னை காதல் எனும் படத்தில் நடித்திருந்தார். பல குரல்களில் பேசிய கோவை குணாவுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனை
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவரது இழப்பால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் சன் டிவியின் அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக இருந்த நகைச்சுவை நடிகர் மதன் பாபு கோவை குணா குறித்து நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

குணா மரணம்
அவர் பேசுகையில் கோவை குணாவுடைய மரணம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரை ஆரம்பத்தில் இருந்தே எனக்கு தெரியும். ஆள் நன்றாக ஜம்முனு இருப்பார். எப்போதும் கோட் சூட் அணிந்திருப்பார். அவரது பெர்ஃபாமன்ஸில் எந்த குறையும் இருக்காது. அவருடைய நிகழ்வுகள் அனைத்திலும் நான் நடுவராக இருந்துள்ளேன்.

டேலண்ட்
அதன்பிறகு நானும் அந்த நிகழ்ச்சியை தயாரித்தேன். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களிலேயே அவருக்கு நம்பர் ஒன் டேலண்ட் உள்ளது. இன்று பலர் செய்யும் கவுண்டமணி சார் டான்ஸை கோவை குணாதான் முதன்முதலில் செய்தார். எப்போதுமே சொந்தமாகவே நகைச்சுவைகளை செய்வார். என் நண்பர் எடுத்த படத்தில் எனக்கு ஒரு வேடம் கொடுத்தார். ஆனால் எனக்கு தேதியில்லாததால் நான்தான் கோவை குணாவை பரிந்துரைத்தேன்.

தயாரிப்பு நிறுவனம்
கோவை குணாவின் நடிப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடித்து போகவே நல்ல சம்பளம் கொடுத்தார்கள். நான் மீண்டும் மீண்டும் அனைவருக்கும் சொல்வது இதுதான். கெட்ட பழக்கங்கள் அளவோடு இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் படகு செல்லும். ஆனால் படகுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படித்தான் அளவுக்கு அதிகமாக கெட்ட பழக்கம் இருந்தால் அது மிகவும் மோசமானது.

திறமைசாலி
இந்த நேரத்தில் நான் பேசக் கூடாதுதான். இருப்பினும் இதை பார்க்கும் போது எத்தனை கஷ்டமாக இருக்கிறது. சினிமாவில் இப்படித்தான் நிறைய பேர் கெட்ட பழக்கத்தால் இறந்து போகிறார்கள். கோவை குணா அவ்வளவு பெரிய திறமைசாலி. அவர் இறப்பு எல்லாருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது என மதன் பாப் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications