மணிவண்ணன் குடிச்சதால இறக்கல.. அந்த இன்டர்வியூவில் விழுந்த அடி.. முதல் முறை மனம் திறந்த சகோதரி
சென்னை: நடிகர் மணிவண்ணன் திரைப்பட நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் அறிவாளராகவும் பலருக்கும் பரீட்சையமானவர்தான்.
அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி மரணம் அடைந்திருந்தார். அவருடைய மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

மணிவண்ணன் அளவுக்கு அதிகமாக குடித்து வந்ததால் தான் அவர் இறந்து விட்டார் என்று பலர் கூறிவரும் நிலையில் அதை மறுத்து மணிவண்ணனின் சகோதரி பல உண்மைகளை உடைத்திருக்கிறார்.
ஒரு சிலருக்கு தான் பல திறமைகள் ஒருசேர அமைந்திருக்கும். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் மணிவண்ணன். இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் 50 திரைப்படங்களை இயக்கியும் இருந்தார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய கோயம்புத்தூர் பாஷையில் நக்கலும் நையாண்டித்தனமாக அரசியலை பற்றி கிடைக்கும் இடங்களில் புட்டு புட்டு வைத்து விடுவார்.
அதுமட்டுமல்லாமல் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை எல்லாம் அப்படியே சினிமாவில் வசனங்களாக மாற்றி விடுவது இவருடைய தனித்திறமை. அதோடு மார்க்சிய சித்தாந்தம், தமிழ் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவை அதிகமான ஈடுபாடு கொண்டு இருந்த மணிவண்ணன் அதற்காக பல போராட்டங்களிலும் கலந்து கொண்டு இருக்கிறார்.
அந்த காலகட்டத்தில் மணிவண்ணன் ஸ்கூல் முடித்து காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் சத்யராஜோடு நண்பராக மாறி இருக்கிறார். அப்போது ஆங்கிலத்தில் பட்டம் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சேக்ஸ்பியரின் பாடங்கள் படிப்பதற்கு மணிவண்ணனுக்கு அதிகமாக கஷ்டமாக இருந்திருக்கிறது. அதனாலே மேடையில் ஷேக்ஸ்பியர் நாடகம் நடிக்கும் போது கல்லூரி மாணவர்கள் மணிவண்ணனை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
அதனால் மணிவண்ணன் படிப்பை பாதியிலேயே முடித்து விட்டாராம். ஆனாலும் தான் அவமானப்பட்டது மனதில் இருந்து அழிக்க முடியாமல் மணிவண்ணன் கஷ்டத்தில் இருந்திருக்கிறார். அப்போது கிழக்கே போகும் ரயில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த திரைப்படம் இவருக்குள் ஒரு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் பாரதிராஜாவுக்கு மணிவண்ணன் கடிதம் எழுதி இருக்கிறார். அதுவும் ஒன்றல்ல ரெண்டு அல்ல 100 பக்கங்களுக்கு கடிதம் எழுதினாராம்.
பிறகு பாரதிராஜா மணிவண்ணனை தன்னுடைய உதவியாளராக ஏற்றுக்கொள்ள சம்மதித்திருக்கிறார். கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தில் பாரதிராஜா நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் அவருக்கு உதவியாளராக சேர்ந்திருக்கிறார். பிறகு அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் மணிவண்ணன் எழுதியிருக்கிறாராம்.
அதிலும் நிழல்கள், டிக் டிக் ,அலைகள் ஓய்வதில்லை போன்ற ஏராளமான திரைப்படங்களுக்கு பாரதிராஜாவின் உதவியாளராக மணிவண்ணன் இருந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இயக்குனராக மாறிய மணிவண்ணன் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் இயக்கியிருக்கிறார். அதில் 34 திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படியாக மணிவண்ணனின் சினிமா வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அதுபோலவே அவருடைய நிஜ வாழ்க்கையும் பல கஷ்டங்களையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது. அது பற்றி மணிவண்ணனின சகோதரி முதல் முறையாக பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் மணிவண்ணன் அண்ணன் எனக்கு ஒரு அண்ணன் மட்டுமல்ல அப்பா போல தான் என்னை பாதுகாத்து வந்தார். அண்ணன் இறந்து பத்து வருஷம் ஆகிவிட்டது. இத்தனை நாட்களை நான் எப்படி கடந்து வந்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணன் இருந்த வரைக்கும் நான் எந்த ஒரு விஷயத்தை கேட்டாலும் எனக்கு உடனே வாங்கி தந்து விடுவார், நான் எது கேட்டாலும் முடியாது என்று சொன்னதே கிடையாது.
அண்ணன் மட்டுமல்ல அண்ணியும் அப்படித்தான். அண்ணனும் அண்ணியும் தான் என்னை அம்மா அப்பா போல பார்த்துக் கொண்டார்கள். அண்ணன் இறப்பு குறித்து சில வதந்திகள் பரவி வருகிறது. அதில் மணிவண்ணன் அளவுக்கு அதிகமாக குடித்ததால் இறந்துவிட்டார் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அதுவெல்லாம் உண்மையே கிடையாது. அண்ணன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே குடியை முழுமையாக விட்டு விட்டார். அதற்குப் பிறகு அம்மா அந்த நேரத்தில் தான் இறந்து போயிருந்தார். அந்த துக்கத்தில் மணிவண்ணன் அண்ணன் இருந்தார். ஆனாலும் அப்போதும் கூட அண்ணன் குடிக்கவில்லை அதற்குப் பிறகு அண்ணிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது.
அண்ணிக்கு புற்றுநோய் இருந்து இருக்கிறது. அதுவும் கடைசி கட்டத்தில் இருக்கிறார் என்ற உண்மையை எங்கள் யாரிடமும் சொல்லாமல் டாக்டர் அண்ணனிடம் மட்டும் கூறியிருக்கிறார். அதை தெரிந்த பிறகு தான் அண்ணன் மனது ரொம்பவே உடைந்து போயிருந்தார். அவருக்குள் ஆயிரம் கவலைகளை மனதிற்குள்ளே வைத்து வந்தது தான் அவருடைய மரணத்திற்கு காரணம்.
ஏற்கனவே அண்ணன் இறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது அப்போது அண்ணன் கால் தடுமாறி கீழே விழுந்து விட்டார். அதில் அவருக்கு அடிபட்டு இருந்தத அதற்குப் பிறகு இரண்டு மாதமாக அண்ணனும் உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தார். அண்ணன் இறந்த சில நாட்களிலே அண்ணியும் இறந்து போய்விட்டார் என்று மணிவண்ணனின் இறப்பு குறித்து அவருடைய தங்கை விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications