நடிகர் மனோபாலா இப்படிப்பட்டவரா? கடைசியாக வெளியிட்ட புகைப்படம்.. வெளியான தகவல்கள்
சென்னை: நடிகர் மனோபாலா உடல் நல பிரச்சனையின் காரணமாக இன்று காலமாகி இருக்கிறார்.
அவருடைய இறப்பு குறித்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கடைசியாக பதிவிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மனோபாலா காமெடி நடிகராகவும் குண சித்திர வேடத்திலும், சின்னத்திரையும் வெள்ளி திரைகளிலும் நடிகராகவும் ஒரு இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருந்தார். இவர் திரை உலகில் ஆரம்பமானது என்னவோ இயக்குனராகத்தான். அதற்கு பிறகு தான் நடிகராக மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய 69 வது வயதில் உடல்நல குறைவால் மரணமடைந்திருக்கிறார். அவருடைய இறப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களையும் பாதித்திருக்கிறது. இவருடைய இறப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் முதல் வடிவேலு, கருணாஸ் என பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் கருணாஸ் எனக்கு இந்த விஷயம் ரொம்ப அதிர்ச்சியாக உள்ளது. நான் வெளியூரில் கொடைக்கானல் படப்பிடிப்பில் இருக்கிறேன். இவர் பலரும் பாராட்டக்கூடிய ஒரு அற்புதமான மனிதர். யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் அணுகலாம். மிகச்சிறந்த இயக்குனராகவும் மனோபாலா திகழ்ந்தார்.

மேலும் காதல் கொண்டேன் படத்தை நாங்கள் இருவரும் தேனியில் பார்த்தோம். படத்தைப் பார்த்தவுடன் செல்வராகவனுக்கும் தனுஷுக்கும் உடனே தொலைபேசியில் அழைத்து அவர் வாழ்த்து சொன்னார். நான் அப்போது நடிக்க வந்த புதிது, என்னையும் அவர்களிடம் பேச வைத்தார் என்று கூறியிருக்கிறார்..
இந்த நிலையில் கடைசியாக நடிகர் மனோபாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மனோபாலாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 58 கே பாலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் கடைசியாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ச் 16ஆம் தேதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு அதிகமானோர் தற்போது இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications