அந்த வீடியோ வெளியிட்டு 24 மணி நேரம் கூட ஆகலையே..அதற்குள் நடிகர் மனோபாலா உயிர் பிரிந்த துயர சம்பவம்
சென்னை: நடிகர் மனோபாலா உடல் நல குறைவு காரணமாக சில மணி நேரத்திற்கு முன்பு மரணம் அடைந்திருக்கிறார்.
நடிகர் மனோ பாலாவின் இறப்பிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய youtube பக்கத்தில் அவர் கடைசியாக நடிகை கோவை சரளாவை பேட்டி எடுத்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர்களுக்கு மரணம் வந்துவிட்டது என்று ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் மனோ பாலா தன்னுடைய youtube சேனலானா வேஸ்ட் பேப்பரில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதுதான் அவரது கடைசி youtube வீடியோவாக மாறி இருக்கிறது. இந்த வீடியோவில் நடிகை கோவை சரளாவை பேட்டி எடுத்து திரைத்துறை குறித்து உற்சாகத்தோடு பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் அந்த வீடியோ வெளியாகி 24 மணி நேரத்திற்குள் அவர் உயிர் பிரிந்து இருப்பது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் மனோபாலா இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல முகம் கொண்டவர். தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.

இறப்பு குறித்து அன்றே கணித்த நடிகர் மனோ பாலா.. நடிகர் விவேக் இறந்த நேரத்தில் சொன்ன வார்த்தை..?
அதுபோக தன்னுடைய youtube சேனல் மூலம் பிரபலங்களை பேட்டி எடுத்து பல தகவல்களை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அப்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு குணமடைந்து வீடு திரும்பிய அவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பிறகு தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வந்த மனோபாலா தன்னுடைய youtube சேனலிலும் கோவை சரளா உடன் பழம்பெரும் நடிகை மனோரமா குறித்து பேசி இருக்கின்றார். மூன்று நிமிடம் 13 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் கலகலப்பாக பேசும் மனோபாலா திரைத்துறை நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் இன்று அவருடைய உயிர் பிரிந்து விட்டது. மனோபாலாவின் மரணம் குறித்த வருத்தத்தை இந்த வீடியோவில் ரசிகர்கள் இரங்கலாக தெரிவித்து வருகிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications