தக் லைஃப் படம் ஓடாத காரணமே இதுதான்! இந்த பாயிண்ட் மறந்துட்டாரு! வெளிப்படையாக பேசிய மன்சூர் அலிகான்
சென்னை: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சில விஷயங்களை மறந்து விட்டார், அதனால் தான் இந்த படம் வெற்றி அடையவில்லை என்று மன்சூர் அலிகான் பேசி இருக்கிறார்.
இயக்குனர் மணிரத்தினமும் கமல்ஹாசனும் 38 வருடங்களுக்குப் பிறகு தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்திருந்தனர். இதனால் இந்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. பேன் இந்தியா படமாக உருவாக்கப்பட்டதால் இது அதிக அளவில் வெற்றி அடையும் என்றும் கூறப்பட்டது. அதேபோல ப்ரமோசனிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஆனாலும் இந்த திரைப்படம் வெளியாகி இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு குறைவான வசூலைப் பெற்று வருகிறது.

தக் லைஃப் திரைப்படம் ரிவ்யூ
தக் லைஃப் திரைப்படம் தொடங்கப்படும் போதே பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் உருவானதுதான். இந்த திரைப்படத்தில் சில நடிகர்கள் முதலில் கமிட்டாகி இருந்தனர். பிறகு திடீரென்று விலகி விட்டனர். அதற்கு பிறகு தான் கமல்ஹாசன் உடன் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனாலும் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டது. கமல், சிம்பு, திரிஷா, அபிராமி போன்ற முன்னணி நடிகர்கள் இருந்தும் படத்தின் கதை, திரைக்கதையில் மணிரத்தினம் கோட்டை விட்டுவிட்டார் என்று கூறப்பட்டுகிறது.
நெகட்டிவ் கமெண்ட்ஸ்
கமல்ஹாசனுக்கு அன்பான மனைவி இருந்தும் திரிஷாவை துணைவி ஆக்க போராடுவதும், கமல்ஹாசனின் மகன் என்று கூறப்படும் சிம்பு திரிஷாவை அடையப் போராடுவது போன்ற காட்சிகளும் இந்த படத்திற்கு எதிர்மறையான கமாண்டுகளை கொடுத்தது. இந்த படத்தை பற்றிய மீம்ஸ்களில் இணையத்தில் பலரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தைப் பற்றி ப்ளூசட்டை மாறன் இது பிட்டு படம் போல இருக்கிறது என்று தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.
மன்சூர் அலிகான் வீடியோ
இப்படி அதிகமான நெகட்டிவ்களை சந்தித்து வரும் நிலையில் இந்த படத்தை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் "தக் லைஃப் திரைப்படத்தை பற்றி தான் இப்போது எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் வெற்றி அடையாமல் போனதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமானுக்கு இறைவன் மீது இருந்த பற்றுதல் குறைந்து என்று நினைக்கிறேன்.
ஏ ஆர் ரகுமான் பாடல்
ஏ ஆர் ரகுமானுக்கு இறைவன் அருள் அதிகமாக உண்டு. அவர் எப்போதுமே கடவுள் மீது நல்ல மரியாதையும் பாசமும் வைத்திருப்பார். ஆனால் நான் அவரளவுக்கு இல்லை என்று தான் சொல்ல முடியும். அவருடைய படங்களில் கூட எல்லாப் புகழும் இறைவனுக்கு என்று சொல்பவர். ஒரு படத்தில் எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்று சொன்னவர். இஸ்லாமிய பாடல்கள் சந்தம் அவரின் பாடல்களில் இருக்கும்.
படம் பார்க்கவில்லை
தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலின் சங்தமும் அப்படித்தான். அது இறையருளோடு தொடர்புடைய ஒரு பாடலில் சந்தமாகும். அந்த பாடல் படத்தில் இடம் பெற்று இருந்தால் அந்த படம் ஹிட் அடித்திருக்கும் என்பதுதான் என்னுடைய எண்ணம். ஆனால் நான் இந்த படத்தை பார்க்கவில்லை. எனக்கு கொஞ்சம் குடும்ப பிரச்சனையும் இருக்கிறது, ஷூட்டிங்கிலும் பிசியாக இருக்கிறேன். ஆனாலும் எல்லோரும் சொல்வதை வைத்து பார்க்கும் போது எனக்கு இதுதான் தவறாக தோன்றுகிறது மற்றபடி எதுவும் இல்லை" என்று சிரித்தபடியே மன்சூர் அலிகான் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications