ரஜினிகாந்த் பற்றி கோபத்தில் மன்சூர் அலிகான் எழுப்பிய கேள்வி.. "அவரை” பார்த்து கத்துக்கணுமாம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது மன்சூர் அலிகான் தனக்கு இருக்கும் கோபத்தை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அத்தோடு இன்னொரு நடிகரோடு நடிகர் ரஜினிகாந்தை ஒப்பிட்டு மன்சூர் அலிகான் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் என்ன பேசினார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். அத்தோடு ரசிகர்களின் கருத்து என்ன என்பதை பற்றியும் பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தியேட்டர்களில் அமோகமாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதே நேரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ரஜினிகாந்த் பற்றி தன்னுடைய கருத்துக்களையும் கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்.
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டராகவும், ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினி மீது தான் கோபமாக இருப்பதாக பேசி இருக்கிறார். அதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரம் தான். ஆனால் அவர் படத்தில் மட்டும் தான் ஹீரோவாகவும் சூப்பர் ஸ்டார்வும் இருக்கிறார் என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. நிஜத்திலும் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்..
ரஜினிகாந்த் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்வார் என்று நினைத்தேன் ஆனால் நான் நினைச்சது எதுவுமே நடக்கல என்பதுதான் எனக்கு கோபம். கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்தவர்தான் புனித் ராஜ்குமார். இவர் சமீபத்தில் தான் இறந்துவிட்டார். ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் மக்கள் அவரை மறக்கவில்லை. அவர் மீது அதிகமாக பாசமாகவும் நன்றியோடும் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்களுக்கு செய்த உதவிகள் தான்.
புனித் ராஜ்குமார் செய்த உதவியால்தான் அவரை மக்கள் தெய்வமாக நினைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையே. நான் ரஜினிகாந்துடன் படையப்பா படத்தில் நடித்திருக்கிறேன். ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர். ஆனால் அவர் படத்தில் மட்டும் தான் ஹீரோ நிஜத்தில் அல்ல. படத்தில் அவர் இடது சாரியாக நடித்துக் கொண்டு இருந்தாலும் நிஜத்தில் வலது சரியாக தான் இருக்கிறார். அதனால் தான் எனக்கு பிரச்சனை என்று அந்த பேட்டியில் மன்சூர் அலிகான் பேசி இருக்கிறார்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications