“ஒரு கிழவனை நம்பி இவ்வளவு பணம் போட்டு இருக்கு”.. இந்தப் படம் எதிலும் கொறஞ்சதில்ல- ஜெயிலர் மாரிமுத்து
சென்னை: நடிகர் மாரிமுத்து சமீபத்தில் தேசிய விருது பெற்ற கடைசி விவசாயி திரைப்படம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
அதே நேரத்தில் புஷ்பா திரைப்படத்திற்கு கிடைத்த விருது ஜெய் பீம் திரைப்படத்திற்கு எதனால் கிடைக்கவில்லை என்றும் தன்னுடைய விளக்கத்தையும் மாரிமுத்து கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா, பரம்பரை போன்ற பல திரைப்படங்கள் நிச்சயம் தேசிய விருது பெரும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் இந்த திரைப்படங்களுக்கு விருது கிடைக்காதது தமிழ் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து பேட்டியில் எனக்கு இது ஏமாற்றமா தெரியலை. ஏன்னா ஒரு வருஷத்துக்கு 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நாம தயாரிக்கிறோம். அதில் தேசிய விருதுக்கு தகுதியான ஒரு 15 படங்களாவது வரும். ஆனால் அந்த 15 படங்களுக்கும் மொத்தமாக கொடுக்க முடியாது. ஏனென்றால் நம்ம இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கு. எல்லாவற்றிலும் கொடுக்க வேண்டும்.
அதனால் எனக்கு இது ஏமாற்றமாக தெரியவில்லை. அதே நேரத்தில் "கருவறை" என்ற திரைப்படத்தில் நல்ல இசை அமைப்பாளருக்காக ஸ்ரீகாந்த் தேவா வாங்கி இருக்கிறார். இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி தான். ஸ்ரீகாந்த் தேவா ஒரு நல்ல நண்பர் அவர்களுடன் நான் நிறைய படங்களில் வேலை பார்த்திருக்கேன். அவர் ஒரு பயங்கரமான டெடிகேட்டிவ் ஒர்க்கர். கதைக்கும் டைரக்டருக்கும் தகுந்த மாதிரி ரொம்ப அழகா வேலை செய்து கொடுப்பார்.
பல வருடங்களாக இடைவிடாது அவர் தன்னுடைய பணியை செய்து கொண்டிருந்தார். அவருக்கு இந்த கருவறை என்ற திரைப்படத்திற்கு விருது கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஆனால் நான் இன்னவும் அந்த படம் பார்க்கவில்லை. அதே நேரத்தில் மியூசிக் ரொம்ப அற்புதமாக இருந்திருக்கும். அதுபோல தேவா சார் இன்னமும் எந்த ஒரு அவார்டும் வாங்கவில்லை. ஆனால் ஸ்ரீகாந்த் தேவா வாங்கி இருப்பது சந்தோஷம்தான் என்று கூறியிருக்கிறார்.
அதோடு கடைசி விவசாயி திரைப்படத்தில் சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருது மணிகண்டனுக்கு கிடைத்திருக்கு. அது எனக்கு ரொம்பவே சந்தோஷம் தான். கடைசி விவசாயி என்ற திரைப்படத்தில சினிமாவை தாண்டி ஒரு வேற லெவல் கதை உள்ளது. பல திரைப்படங்களில் கதை காமெடி, காதலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கும் போது இந்த திரைப்படத்தில் எதையுமே பார்க்காமல் ஓர் உசிலம்பட்டியில் இருக்கும் ஒரு கிழவனை நம்பி அவனை நாயகனாய் வைத்து படம் எடுத்து இருக்கு.
அது எவ்வளவு பெரிய விஷயம். எல்லாத்துக்கும் செலவுதான் ஆகும். கிழவன் நடிக்கிறதுனால அதுல செலவு இல்லாம இருக்காது. மினிமம் பட்ஜெட்டில் அந்த படத்தை பண்ணி இருக்காரு. கடைசி விவசாயி திரைப்படம் ஒரு மரியாதையான படைப்பு. ஒரு கிழவன் யாரையும் நம்பாமல் கடைசி வரைக்கும் மண்ண நம்பி கிண்டிக்கிட்டே கிடந்தான் என்ற கதை வந்து ஒரு சினிமா மெட்டீரியலே கிடையாது.
ஒரு வாழ்வியல் மெட்டீரியல் தான். இதை நம்பி சினிமாவில் கொண்டு வந்து ஒரு தாத்தாவை நடிக்க வைத்தது எல்லாம் லேசுபட்ட காரியம் கிடையாது. அதுவும் அவருக்கு எந்த சினிமா அனுபவமும் கிடையாது. அவரை சினிமாவில் நடிக்க வைத்திருக்கிறது. பெரிய வேலை தான். அவருக்கு எதுவுமே தெரியாது. மாட்டை பிடிச்சிட்டு நடந்து வா என்றால் நடந்து வருவாரு. அது அவருக்கே தெரியாம நம்ம சூட் எடுக்கணும். அதெல்லாம் லேசு பட்ட காரியம் கிடையாது. நான் ஒரு விவசாயி என்கிற விதத்தில் எனக்கு கடைசி விவசாயி திரைப்படத்திற்கு விருது கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சி தான் என்று அந்த மாரிமுத்து பேசி இருக்கிறார்.
அதுபோல ஜெய்பீம் திரைப்படத்திற்க விருது கிடைக்கவில்லையே என்ற கேள்விக்கு மாரிமுத்து, மழைப்பொழியும் போது ஒரு பிரதேசத்தில் பெய்யும் ஒரு பிரதேசத்தில் பெய்யாது. அந்த மாதிரி தான் தேசிய விருதுகளையும் பார்க்க வேண்டும். அதுக்காக சூரி என்கிற அமைப்புகள் இருக்கிறார்கள். அவங்க எதற்காக ஜெய்பீம் திரைப்படத்திற்கு அவார்டு கொடுக்கல என்பதை சொல்லுவாங்க.
ஜெய் பீம் இந்த முறை விருது வாங்கலன்னா, விருது வாங்காது என்று சொல்ல முடியாது. அடுத்த முறை வாங்கலாம். ஜெய் பீம் திரைப்படம் கடைசி விவசாயி படத்திற்கு குறைந்தது என்று சொல்ல முடியாது. நான் ஜெய் பீம் திரைப்படத்தை இரண்டு வாட்டி பாத்துட்டேன் என்று அந்த பேட்டியில் மாரிமுத்து பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications