அரைகுறை ஆடையுடன் நின்ற பெண்.. எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து போன் நம்பரை கொடுத்த "விஷமிகள்.." கொடுமை
சென்னை: அரைகுறை ஆடையுடன் நின்று போட்டோ போட்ட பெண்ணுக்கு நடிகர் மாரிமுத்து தனது போன் எண்ணை கொடுத்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த தகவலை கேட்டு மாரிமுத்துவே அதிர்ச்சி அடைந்துவிட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியை பார்க்கலாம்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் சினிமா கனவுடன் சென்னைக்கு வந்தார். 2008 ஆம் ஆண்டு கண்ணும் கண்ணும் எனும் படத்தை இயக்கினார். இதன் பின்னர் புலிவாய் எனும் படத்தில் 2014 ஆம் ஆண்டு சப்போர்டிங் ரோல் செய்திருந்தார். இவர் அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்களில் ராஜ்கிரணின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடமும் மாரிமுத்து உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர் நடித்த முதல் படம் வாலி. 2023 ஆம் ஆண்டு இவர் நடித்த படம் கோடை ஆகும். இவர் தற்போது எதிர்நீச்சல் எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

ஆதிமுத்து குணசேகரன்
ஆதிமுத்து குணசேகரன் என்ற கேரக்டரில் தத்ரூபமாக நடித்துள்ளார். ஒருவரது நடிப்பை பார்த்துவிட்டு யார் அதிகம் திட்டுகிறார்களோ அந்த நடிகர் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் என்பது அர்த்தமாகும். இது பொதுவாக சீரியல் வில்லன்கள், வில்லிகளுக்கு பொருந்தும். ஆனால் இந்த முறை மாரிமுத்துவுக்கு பொருந்துகிறது.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சலில் கிட்டதட்ட இவரது கேரக்டரும் வில்லன் என்றே சொல்லலாம். பெண்ணடிமையை ஊக்குவிக்கிறார்கள். பெண்களுக்கு சுயமரியாதை உண்டு என்பதை அவருக்கு கற்றுக் கொள்ளாமல் தனது தம்பிகளையும் கற்கவிடாமல் இவரது வழியையே அவர்களும் பின்பற்றுவது போல் நடக்கிறார். இந்த சீரியல் வாய்ப்புக்கு பிறகு சமூகவலைதளங்கள், யூடியூப் சேனல்களில் ஒரு ரவுண்ட் வருகிறார் மாரிமுத்து.

நடிகர் மாரிமுத்து
இந்த நிலையில் ட்விட்டரில் ஆபாச கன்டென்டுகளை அனுப்பும் கணக்கிலிருந்து அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு "Can I Call You" என அந்த பெண் கேட்பது போல் பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயர் கொண்ட ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து யெஸ் என உடனடியாக ரிப்ளை வந்தது. மேலும் மாரிமுத்துவின போன் நம்பரும் அந்த ட்விட்டர் கணக்கிலிருந்து போயுள்ளது.

மாரிமுத்துவே அதிர்ச்சி
இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீரியல்களில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்லும் குணசேகரனா இப்படி என விவாதங்கள் கிளம்பின. ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியை பார்த்தால் அது மாரிமுத்துவுக்கே அதிர்ச்சியாக உள்ளது. காரணம், போன் நம்பர் அவருடையதுதான், ஆனால் அவர் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கு அவருடையது அல்ல. இதற்கு அவருடைய மகன் அகிலன் விளக்கம் அளித்துள்ளார்.

மாரிமுத்து மீது அவதூறு
அதன் பிறகுதான் மாரிமுத்து மீது அவதூறு பரப்பு யாரோ விஷமிகள் செய்த சதி என தெரியவந்தது. அதாவது மாரிமுத்துவின் ஒரிஜினல் நம்பரை யாரோ எடுத்து அவரது பெயரில் ட்விட்டர் ஐடியை கிரியேட் செய்து இது போல் விஷமத்தனம் செய்துள்ளார்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அகிலன் மாரிமுத்து கூறுகையில், மாரிமுத்து சார்பில் நான் விளக்கமளிக்கிறேன். பெண்ணுக்கு போன் நம்பர் அனுப்பப்பட்ட ட்விட்டர் கணக்கு எனது அப்பாவினுடையது அல்ல. அவருடைய போன் நம்பர் கொஞ்ச நாட்களாக அனைவருக்கும் கிடைத்துள்ளது. இதனால் அந்த எண்ணை யாரோ அவதூறு பரப்பு வேண்டும் என வேண்டுமென்றே பயன்படுத்தியுள்ளனர் என கூறி அந்த ஆபாச கண்டென்ட் அனுப்பிய கணக்கிலிருந்து வந்த ஐடியிடம் தயவு செய்து இந்த போஸ்ட்டை நீக்க வேண்டும் என அகிலன் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications